உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, October 12, 2019

காட்டுமன்னார்கோவிலில் விவசாயிகள் பங்கேற்ற கலெக்டர் தலைமையிலான ஆலோசனைக்கூட்டம்





காட்டுமன்னார்கோவிலில் விவசாயிகள் பங்கேற்ற கலெக்டர் தலைமையிலான ஆலோசனைக்கூட்டம்.கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான விவசாயிகள் பங்கேற்ற குறைகேட்பு நிவர்த்தி கூட்டம் காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள லால்பேட்டை பொதுப்பனித்துறை வளாகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பொதுப்பனித்துறை அதிகாரிகள் சாம்ராஜ்,குமார்,ஞானசேகரன்,பார்த்தீபன்,வெற்றிவேல், அய்யன்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் தமிழ்செல்வன் பங்கேற்றார்.பின்னர் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக்கூட்டத்தில் காட்டுமன்னார்கோவில்,சேத்தியாத்தோப்பு,புவனகிரி,சிதம்பரம் பகுதிகளைச்சேர்ந்த வீராணம் ஏரியிலிருந்து பாசனப்பகுதி விவசாயிகள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.சிறப்பாக நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் தங்கள்பகுதியின் பாசன வாய்க்கால்களில் உள்ள ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடிகளையும்,மேலும் பெரும்பாலான பாசன வாய்க்கால்கள்  இன்னமும் குடிமராமத்து பணிகள் மூலம் தூர்வாரப்படாமல் இருப்பதையும் எடுத்துக்கூறி அதனை சரிசெய்திட மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனிடம் கோரிக்கை வைத்தனர் இதற்கு பதிலளித்து பேசி கடலூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக இரண்டுநாட்களுக்குள் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும்.அதற்குண்டான ஜேசிபி எந்திரங்களை பொதுப்பனித்துறை அதிகாரிகள் உடனடியாக சம்மந்தப்பட்ட இடத்திற்கு வரவ¬-ழத்து பணிகள் தொடங்கப்படும் என்று பதிலளித்தார்.தொடர்ந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் தமிழக அரசு விவசாயிகளின் நலனை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதனால் விவசாயிகள் தங்களது குறைகளை நேரடியாக விரைவாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும்.அவ்வாறு கொண்டுவரப்படும் அனைத்து குறைகளும் உடனடியாக நிவர்த்திசெய்யப்படும்.தற்போது தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருவதில் கடலூர் மாவட்டம் முதன்மையாக திகழ்கிறது என்று இப்பகுதி விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.தமிழக முதல்வரும் அதனை வரவேற்று பாராட்டியிருக்கிறார் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.நிறைவாக தற்போது நடக்கும் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் இப்பகுதிவிவசாயிகள் அதிக மகசூல் மற்றும் அதிக லாபம் பெறவேண்டும் என்பதற்காக  மாவட்ட நிர்வாகம்,தமிழக அரசும் இணைந்து செயல்படுத்தி வருவதாகவும் விவசாயிகள் முழு ஒத்துழைப்பை தரவேண்டும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் விவசாயிக     ளிடம் வேண்டுகோள் வைத்தார்.இந்த ஆலோசனைக்கூட்டத்தில் வீராணம் ஏரிபாசனசங்கதலைவர் பாலு,தவாக ரவிபிரகாஷ்,ரவீந்திரன்,ரங்கநாயகி,அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இந்த ஆலோசனை மற்றும் நிவர்த்திக்கூட்டத்தில் பங்கேற்றனர்.