பாரதிய ஜனதாகட்சி சார்பில் காந்திகண்ட கனவை நிஜமாக்கும் நடைபயணம்.கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மருதூரில் இருந்து புவனகிரி ராகவேந்திரர் கோவில் வரை கடலூர் மாவட்ட பாஜக தலைவர் தாமரை மணிக்கண்டன் தலைமையில் நடைபயணம் நடைபெற்றது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 முதல் முப்பதாம் தேதி வரை நடைபயணமாக மாவட்ட முழுவதும் பாஜகவினர் மேற்கொள்ள திட்டமிட்டு அதன்படி நடைபயணம் மாவட்டத்தின் பல இடங்களிலும் நடைபெற்று வருகிறது.இதன் நோக்கம் காந்தி கண்ட சாம்ராஜ்யம், அவருடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், தூய்மை இந்தியா, மது ஒழித்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு, மரம் நடுதல், பெண்கள் பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்ச கோரிக்கைகள், கோஷங்களோடு நடைபயணமானது நடைபெறுகிறது. புவனகிரி அருகே உள்ள மருதூரில் துவங்கிய பேரணியில் மாவட்ட செயலாளர்கள் புவனை வெற்றிவேல், சண்முகம், பாலரவி, ராஜ்மோகன், லட்சுமணன், தங்கமணி, மண்டல் தலைவர்கள் பரங்கிப்பேட்டை முருகன், புவனகிரி நாகராஜன்,கல்யாணசுந்தரம்,மற்றும் இளைஞர் அணி தியாகு, மாவட்ட தலைவர் யாழ், மாவட்ட செயலாளர் பார்த்தசா,ராமநாதன் ராஜராஜன் சேகர், கந்தன் ,அருள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.