புவனகிரி அருகே சுத்துக்குழி கிராமத்தில் சேற்றில் நேரடி நெல்விதைப்பு துவக்கம்.கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சுத்துக்குழி கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் உள்ள விவசாயிகள் பலரும் சம்பா நடவுப்பணியை விரைவாக துவக்கி செய்து வருகிறார்கள்.இந்நிலையில் நடவுப்பணியில் வழக்கமான கை நடவு நடைமுறையில் விவசாயிகள் செய்து வரும் வேளையில் இக்கிராமத்தில் உள்ள ஜானகிராமன் என்ற விவசாயி தனது பத்து ஏக்கருக்குமேலான வயலில் புதிய முறையான டிரம் சீடர் கொண்டு சேற்றில் நேரடி நெல்விதைப்பினை செய்து வருகிறார்.இதற்கான துவக்க நிகழ்ச்சி அவருடைய வயலில் நடைபெற்றது.இதில் புவனகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுதாமதி,வேளாண்மை அலுவலர் ராஜராஜன். உதவி வேளாண்மை அலுவலர்கள் நாகரத்தினம்,ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று டிரம் சீடர் கொண்டு சேற்றில் நெல்விதைப்பை துவக்கிவைத்தனர்.இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரி சுதாமதி தெரிவிக்கும்போது வழக்கமான கைகளால் நடவு செய்வதை விட சிறந்தது சேற்றில் நேரடி நெல்விதைப்பு.அதிக பலன் குறைந்த செலவுகள் கொண்டது என்று கூறினார்.மேலும் இதுகுறித்து விவசாயி ஜானகிராமன் தெரிவிக்கும்போது தற்போது புவனகிரி வட்டார வேளாண்மை அதிகாரிகள் இதுகுறித்து என்னிடம் எடுத்துக்கூறி அதன்படி செய்ய என்னை ஊக்கப்படுத்தினார்கள்.அவர்கள் கூறுவதுபோல் டிரம் சீடர் மூலம் சேற்றில் நேரடி நெல்விதைப்பு செய்யும்போது நல்ல விளைச்சல், பயிர் பனைப்பு அதிகம், பூச்சித்தாக்குதல் குறைவு,நாற்பதுசதத்துக்குமேல் அதிக மகசூல்,ஆட்கள் குறைவு,பணம்,நேரம் விரயம் உள்ளிட்ட எண்ணற்ற நன்மைகள் உள்ளது என்பதை நானே நேரடியாக தெரிந்துகொண்டு தற்போது என்னுடைய பத்து ஏக்கருக்குமேல் உள்ள நெல் வயலில் சேற்றில் நேரடி நெல்விதைப்பு செய்கிறேன்.வருங்காலத்தில் என்னுடைய அனைத்து வயல்களிலும் இதையே செய்யப்போகிறேன்.என்னைப்பார்த்து இப்பகுதியிலுள்ள மற்ற விவசாயிகளும் இதுகுறித்து ஆர்வமாக கேட்கிறார்கள்.அவர்களுக்கும் இதை எடுத்துக்கூறிவருகிறேன்.எனக்கு தொடர்ந்து வழிகாட்டல்களை வழங்கி வரும் புவனகிரி வட்டார வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு எனது நன்றி எனவும் அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியின்போது அப்பகுதியிலுள்ள முப்பதுக்கும்மேற்பட்ட விவசாயிகள் உடனிருந்து சேற்றில் நேரடி நெல்விதைப்பு முறையை செயல்விளக்கத்துடன் பார்வையிட்டனர்.
Friday, September 27, 2019
புவனிகிரி அருகே சுத்துக்குழி கிராமத்தில் சேற்றில் நேரடி நெல்விதைப்பு துவக்கம்

-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...