உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, September 19, 2019

சேத்தியாத்தோப்பில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழாக்கூட்டம்



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் புவனகிரி ஒன்றிய அதிமுக சார்பில் புவனகிரி ஒன்றிய அதிமுக கழக செயலாளர் சிவப்பிரகாசம்தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழாக்கூட்டம் நடைபெற்றது.சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன்,முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.தொடர்ந்து நடைபெற்றக்கூட்டத்தில் மக்கள் போற்றும் மகத்தான தலைவர் பேரறிஞர் அண்ணாவின் வழியில் வெற்றிநடைபோடும் அதிமுகவை யாராலும்,எத்தனை யுகங்களானாலும் அழிக்கமுடியாது.அண்ணாவின் குரலுக்கு சொன்னதை செய்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,புரட்சித்தலைவி ஜெயலலிதா -ஆகியோர் தொண்டர்களுக்காகவும்,மக்களுக்காகவும் அரும்பாடு பட்டனர்.இப்போதும் அவர்கள் அதிமுகவை வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள்.எளிய குடும்பத்தில் பிறந்த இரண்டு அதிமுக தொண்டர்களான மாண்புமிகு முதல்வர்,துணைமுதல்வர் -ஆகியோர் இன்று புரட்சித்தலைவரும்,புரட்சித்தலைவியும் விட்டுச்சென்ற மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.பேரறிஞர் அண்ணா,புரட்சித்தலைவர்,புரட்சித்தலைவி ஆகியோர் அமைத்த  பாதையில் பயணித்து வரும் அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்றும் கூட்டத்தில் பேசப்பட்டது.
இதில் ஊராட்சி கழக செயலாளர் ஜெயசீலன், சேத்தியாத்தோப்பு எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கானூர் பாலசுந்தரம்,துணை தலைவர் விநாயகமூர்த்தி, சேத்தியாத்தோப்பு நகர கழகசெயலாளர் மணிக்கண்டன், உள்ளிட்ட ஏராளமானவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.மேலும் இந்த கூட்டத்தினை கொட்டும் மழையிலும் மக்கள் ஆர்முடன் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.