உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, August 30, 2019

சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் கிராம அரசு உயர்நிலைப்பள்ளியில் அரசு மருத்துவ துறையின் பொது மருத்துவ முகாம்


சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் கிராம அரசு உயர்நிலைப்பள்ளியில் அரசு மருத்துவ துறையின் பொதுமருத்துவ முகாம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் கிராமம் உள்ளது.இக்கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கிருஷ்ணாபுரம் வட்டார அரசு மருத்துவமனை சார்பில் அரசு மருத்துவ துறையின் சிறப்பு பொதுமருத்துவமுகாம் நடைபெற்றது.இதில் கிருஷ்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிவக்குமார் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கிவைத்தார்.சேத்தியாத்தோப்பு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் லலிதா,அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குணசேகரன் வரவேற்றார்.தொடர்ந்து நடைபெற்ற மருத்துவ முகாமில் டாக்டர் நிவேதிதா மற்றும் மருத்துவ குழுவினர் பயனாளிகளுக்கு உயர்ரத்த அழுத்தம்,நீரிழிவுநோய்,கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனை,எலும்புமுறிவு,தோல்நோய்,தொ-ழுநோய் உள்ளிட்ட அனைத்து வகையான நோய்களுக்கான பரிசோதனைகள்,பரிசோதனைக்பின் மருத்துவ ஆலோசனை மற்றும் இலவச மருந்துகளையும் வழங்கினர்.இந்த அரசு பொதுமருத்துவ முகாமானது தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவாக்கப்பட்ட காப்பீட்டுத்திட்டத்தின்படி பயனாளி தான் விரும்பும் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் வசதி திட்டத்தில் நடைபெற்றது.முகாமிற்கு பின்னலூர்,சீனிவாசபுரம்,அம்பாள்புரம்,மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தங்களுக்கான பரிசோதனைகள் செய்து இலவச மருந்துகளை பெற்றுச்சென்றனர்.மேலும் இம்முகாமில் அவசர சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ் வசதியும் பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.மேலும் முகாமில் சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், கிருஷ்ணாபுரம்  வட்டார மருத்துவ மனை சுகாதார ஆய்வாளர்கள் ரவி வர்மா,லெட்சுமிநாராயணன், சேத்தியாத்தோப்பு ஆய்வாளர் செல்வம்,பகுதி சுகாதார செவிலியர் ராஜேஸ்வரி,ஜோதி உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் வருகை தந்திருந்தனர்.