உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, August 10, 2019

சேத்தியாத்தோப்பு அருகே பெரியநெற்குணம் கிராமத்தில் கிராம விழிப்புணர்வு நிகழ்ச்சி




சேத்தியாத்தோப்பு  அருகே பெரியநெற்குணம் கிராமத்தில்
கிராம விழிப்புணர்வு நிகழ்ச்சி.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அமைந்துள்ளது பெரியநெற்குணம் கிராமம்.இக்கிராமத்தில் நேருயுவகேந்திரா,அன்னைதெரசா இளையோர் சங்கம்,புவனகிரி ஒன்றிய சுற்றுவட்ட இளையோர் பாராளுமன்றம் ஆகியவை இணைந்து கிராம விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.நேருயுவகேந்திராவின் மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் ஹெலன்ராணி தலைமை வகித்தார்.புவனகிரி ஒன்றிய தூய்மை பாரத ஒருங்கிணைப்பாளர் சதன்,உலகளாவிய மனித உரிமைகள் கழகம் கடலூர் கிழக்கு மாவட்டம் இலியாஸ்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அன்னை தெரசா இளையோர் சங்கம் தலைவர் வேல்விழி,அன்னை தெரசா தொண்டுநிறுவனம் சிவக்குமார் ஆகியோர் அனைவரையும் வரவேற்றார்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிராம மக்கள்,இளைஞர்கள், மாணவர்கள்,சிறார்கள்,பெண்கள் என அனைவரும் கிராமத்தூய்மையை காத்திடும்விதம் கழிவறை பயன்படுத்துதல்,அரசின் நலத்திட்ட  உதவிகளை சரியாண ஆவணங்கள் மற்றும் காரணங்களுடன் பெற முயற்சிப்பது,இளைஞர்கள்,மாணவர்கள்,படிக்கும் பெண்கள் ஆகியோர் தங்களை ஏதாவது ஒரு விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடுத்திக்கொள்ளுதல்வேண்டும்,இதனை தினமும் முயலுதல்வேண்டும், படித்து முடித்தபின் கட்டாயம் அனைவரும் தங்களுக்கான சிறு கைத்தொழில் அல்லது சுயவேலை செய்து சம்பாதித்துக்கொண்டே,பிறகு வேலைதேடுவதில் ஈடுபடுதல் வேண்டும்,கிராமத்தின் குடிநீர் ஆதாரம் பெருக்கிட எல்லாவீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்திடவேண்டும்,ஏரிகள், குளங்கள்,குட்டைகள்,கிணறுகள் போன்றவை கிராமமக்கள் அதனை ஒற்றுமையோடு தூர்வாரி பராமரித்திடவேண்டும்,ஒவ்வொரு கிராமத்தைதையும் பசுமையாக்கிட இருக்கின்ற மரங்களை வெட்டாமல்,புதிய மரக்கன்றுகள் நடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கிராம விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் வழங்கபட்டது.முடிவில் கிராமமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும்,இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணப்பொருட்களும்,மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம்,எழுதுப்பொருட்களும் வழங்கப்பட்டது.மேலும் இதில் புவனகிரி ஒன்றியம் தேசிய இளையோர் தொண்டர்கள் லதன்,சூர்யா,அன்னை தெரசா இளையோர் சங்கம் செயலாளர் பிருந்தா உள்ளிட்டவர்களும்,கிராமமக்கள்,இளைஞர்கள்,மாணவர்கள் என ஏராளமானவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.