உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, July 31, 2019

சுகாதார சீர்கேட்டில் வெய்யலூர் அரசுப்பள்ளி சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை






கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அமைந்துள்ளது  வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளி.கிராமப்புற மாணவர்கள் வாழ்க்கையின் உயர்ந்த லட்சியங்களை அடைந்து கிராமத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக நீண்டகால போராட்டத்திற்கு பிறகு வெய்யலூர் அரசு நடுநிலைப்பள்ளி,  உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, பலரின் முயற்சியால் புத்தம் புதியக்கட்டிடத்தில் வெய்யலூர் கிராமத்தில் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது பள்ளியின் நிலையை நேரில் சென்று ஆய்வு செய்தபோது பலரின் உண்மையான முயற்சி முற்றிலும் சிதைந்துபோய் இன்று கண்ணீரை வரவழைக்கும் விதத்தில் இருக்கிறது.இப்பள்ளியில் சென்ற காலங்களில் நூற்றியிருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த வேளையில் தற்போது அறுபத்தியந்துபேர்தான் படித்து வருகிறார்கள் என்று கிராமத்தினர் கூறுகிறார்கள்.இதற்கு காரணம் பள்ளியின் தலைமையில் உள்ள சிலர் பள்ளியின்மேல் அக்கரையில்லாமல் இருப்பதும்,தன்போக்கில் செயல்படுவதும்தான் என்று குற்றச்சாட்டினை முன்வைக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு அரசுப்பள்ளிகளையும் உயிரைக்கொடுத்து மீட்டெடுத்து அதிகப்படியான வசதிகளை செய்து தந்து தனியார் பள்ளிகளைவிட மேம்பட்டதாக அரசு பள்ளிகளை மாற்றி வரும்வேளையில் தற்போதைய வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளியானது வேதனை தரும்விதத்தில் இருக்கிறது.பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு சரியாக இருந்தாலும் இன்றய பள்ளியில் பராமரிப்பு என்பது சுத்தமாக இல்லை.பள்ளியின் கழிவறை என்பது பேருந்து நிலைய கழிவறைபோல மாணவர்கள் வகுப்பறைகளில் அமர்ந்து படிப்பதற்குகூட முடியாமல்,ஆசிரியர்களும் வகுப்பு எடுக்கமுடியாமல் துர்நாற்றம் வீசுவதாக இருக்கிறது.இதுகுறித்து ஏன் இந்த நிலை என்று கேட்க நினைக்கும்போது பதில்சொல்ல ஆட்கள் இல்லாதபோது யாரிடம் சென்று பதிலைத்தேடுவது என்று தெரியவில்லை.

இதுபோன்ற பல கிராமப்புறங்களில் இருக்கும் அரசு உயர்நிலைப்பள்ளிகள் நன்றாகவும் அதிக மாணவர்கள் சேர்க்கையோடு இருக்கும் நிலையில் வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளியானது மூடுவிழா காணப்போகிறதோ என்று கண்ணில் கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது.பள்ளியில் கழிவறை சுத்தமாக பராமரிக்கப்படுவதில்லை எனவும்,கழிவறை வடிகால் பைப்லைன் உடைந்து இருப்பதால்,இதனருகில் சமையல்கூடம் இருப்பதாலும் மாணவர்களுக்கு சுகாதாரமான உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கிராமமக்கள் ப்ளளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தும் அவர் இதுப்பற்றிய அக்கரை இல்லாமல் இருப்பதாக கிராமமக்கள் வேதனையோடு தெரிவிக்கிறார்கள்.மேலும் பள்ளியின் மேல்தளத்தில் சுகாதாரமான குடிநீரை மாணவர்கள் பெற ஆர்ஓ வாட்டர் சிஸ்டம் ஆரம்பத்தில் போடப்பட்டதோடு சரி.அதில் தற்போது தண்ணீரே வருவதில்லை.பள்ளியின் வளாகத்தில் தாரளமாக இடமிருந்தும்  அதில் புதிய சுகாதாரமான சமயலறைக்க்கட்டிடம் கட்ட அனுமதி கிடைத்தும் அப்பகுதியை சேர்ந்த யாரோ ஒருவர் இப்பள்ளியை நான் இழுத்து மூடாமல் விடமாட்டேன் என்று சபதம்போடுவதாக அப்பகுதியில் உள்ளவர்கள் நெஞ்சக்குமுறலோடு தெரிவிக்கிறார்கள்.அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் நவீன உபகரணங்களை தமிழக அரசு வழங்கி தரமான கல்வியை எல்லா மாணவர்களும் பெறவேண்டும் என்று அரசு செய்து வரும்போது பள்ளியின் நிர்வாகத்தில் உள்ள தலைமை சரியில்லாமல்போனதால் அதில் கற்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிப்போய், அவர்களின் வாழ்க்கையையே பாழ்படுத்திடுமோ எனும் நிலையை வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளி அச்சப்படவைக்கிறது.

அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்களின் வருகையை முறைப்படுத்தி அதன்மூலம் மாணவர்களின் கல்விக்கு எவ்விதமான இடையூறும் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு அரசுப்பள்ளியிலும் ஆசிரியர்களின் வருகையை சரியாகவும்,சரியான நேரத்திற்கு கண்டறிவதற்கும் நவீன உபகரணங்கள் வைக்கபட்டுள்ளபோது இப்பள்ளிக்கு அதனை இன்னமும் பொறுத்தாமல், தனக்கு பிடித்தமான நேரத்தில் பள்ளிக்கு வருவதும்,போவதுமாக பள்ளியின் தலைமை ஆசிரியர் இருப்பதாக மாணவர்களின் பெற்றோர் பலர் கூறுகிறார்கள்.வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளியை பொறுத்தவரை அரசுத்துறை அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தும்,இன்னமும் செய்துகொடுக்க தயாராகஇருந்தும் அதனை சரியாக கேட்டுப்பெற பள்ளியின் தலைமையாசிரியர் தயாராக இல்லை எனவும்,இப்பள்ளி எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று அவர்பாட்டுக்கு பள்ளிக்கு வருவதும்போவதுமாக இருப்பதாக விவரமறிந்த அப்பள்ளி மாணவர்கள் கூறுகிறார்கள்.மாவட்ட நிர்வாகம் உடனடியாக வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளியின்மேல் தனி அக்கரை கொண்டு பள்ளியின் பராமரிப்பை சரிசெய்து,ஆசிரியர்களின் வருகையை அறியும் பயோமெட்ரிக் முறை சிஸ்டத்தை பொறுத்தி,தமிழகத்திலேயே வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளி அதிகமாணவர்கள் படிக்கும் பள்ளி என்று மாற்றிடவேண்டும் என்பதே இங்குள்ளவர்களின் பலமான கோரிக்கையாக இருக்கிறது.மாவட்ட நிர்வாகம் மனது வைக்குமா?