உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, July 8, 2019

சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் சூடாமணி ஏரியினை தூர் வாருவதில் முறைகேடு விவசாயிகள் குற்றச்சாட்டு




சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் சூடாமணி ஏரியினை தூர்வாருவதில் முறைகேடு.விவசாயிகள் குற்றச்சாட்டு.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமையான சூடாமணி ஏரி உள்ளது.இரண்டு கிலோமீட்டர் நீளமும்,சுமார் முப்பது ஏக்கருக்குமேல் பரப்பளவும் கொண்டது சூடாமணி ஏரி.இந்த ஏரிக்கு முக்கிய நீர்வரத்து பரவனாற்று  தண்ணீரும்,நெய்வேலி என்எல்சி வெளியேற்றும் நீரும் இதற்குள் வந்து இப்பகுதியில் உள்ள சுமார் ஆயிரம் ஏக்கருக்குமேல் விவசாய விளைநிலங்களுக்கு நீண்டகாலமாக பாசனவசதியை தந்துகொண்டிருக்கிறது.ஏரியினை முறையாக பராமரிப்பு பணிகள் செய்யாமல் விட்டதால் ஏரியின் ஆழம்குறைந்து ,அதன் உள்கரை சரிந்தும்போய்விட்டது.இதனால் மழைக்காலத்தில் இந்த ஏரியில் தேங்கும் தண்ணீர் ஏரியின் உள் கரை தாழ்வாக இருப்பதால் நடவு வயல்களுக்குள் புகுந்து கடுமையான சேதத்தினை ஏற்படுத்தி வந்தது.இதனால் இந்த ஏரியை பின்னலூர் பகுதி விவசாயிகள் நீண்டகாலமாக உள்கரையை பலப்படுத்தி,தூர் வாரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.நீண்ட இழுபறிக்கு பிறகு தற்போது சூடாமணி ஏரி சுமார் 59 லட்சத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஏரி தூர்வாரப்படுவதை அறிந்த அப்பகுதி விவசாயிகள் அதனை பார்வையிட்டு ஆய்வு செய்தபோது ஏரியை பெயரளவிற்கு தூர்வாரப்படுவதையும்,ஏரிக்கு என்று ஒதுக்கப்பட்ட முழு நிதியையும் செலவு செய்யாமல் அதன் பணிகள் நடப்பதையும் அறிந்தனர்.அதிர்ந்துபோன விவசாயிகள் தூர்வாருபவர்களிடம் சென்று ஏரியை அறைகுறையாக தூர்வாருகிறீர்களே என்றபோது நாங்கள் ஏரியின் கரைகளைத்தான் சரி செய்கிறோம்.தூர்வார வரவில்லை என்று அவர்கள் கூறி விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.மேலும் இந்த நிதியில் ஏரியை தூர்வாரிடமுடியாது.மேலும் அதிக நிதிதேவை.அதற்கு நீங்கள் அரசிடம் செல்லுங்கள் என்ற பதிலையும் சொல்லியிருக்கிறார்கள்.அதிர்ச்சிமேல் அதிர்ந்த விவசாயிகள் மேலதிகாரிகளுக்கு தகல் கேட்க முயன்றபோது அவர்கள் போனை எடுக்கவில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.இது குறித்து பின்னலூர் பகுதி விவசாயிகள் தெரிவிக்கும்போது இந்த சூடாமணி ஏரி மிக பழமையான ஏரி. ஏரியினை உள்கரையை பலப்படுத்தி, அதன் மேல் விவசாய விளைபொருட்களை எடுத்துச்செல்ல வாகனங்கள் செல்லும்படியாக அகலமாகவும், ஏரியின் தண்ணீர் வயலுக்குள் நுழைந்து பாதிப்பு ஏற்படுத்தாமல் இருப்பதற்கு கரையினை உயரமாகவும் அமைத்து ஏரியினை தூர்வாரினால் சரியானதாக இருக்கும்.தற்போது ஒதுக்கியிருக்கும் சுமார் 59 லட்சம் நிதியில் இப்பணிகளை செய்திடமுடியாது.இருந்தாலும் இப்போது ஏரியினை தூர்வாருவதாக சொல்லி கரைகளை சமன்படுத்திமட்டும் நிதியினை முறைகேடாக சுருட்டப்பார்க்கிறார்கள்.இதனை நாங்கள் கண்டிக்கிறோம்.மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த ஏரியை ஆய்வு செய்யவேண்டும். இதற்கு தூர்வார தேவைப்படும் கூடுதல் நிதியை ஒதுக்கி,சூடாமணி ஏரியை உள்கரையை பலப்படுத்தி ஏரியினை தற்போது இருக்கும் நிலையிலிருந்து சராசரியாக நான்கடி ஆழத்திற்கு ஆழப்படுத்திடவேண்டும்.விவசாயிகளின் கோரிக்கையின்படி அதன் மண்ணை கரைகளிலோ அல்லது விவசாயிகளையோ எடுத்துக்கொள்ள அனுமதிக்கவேண்டும்.இவ்வாறு செய்தால் இன்னும் பல ஆண்டுகளுக்கு ஏரியில் தண்ணீர் இருந்துகொண்டே இப்பகுதியினன் விவசாயத்தை செழிப்பாக வைத்திருக்கும்.மேலும் நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதுகாக்கும்படியாகவும் அது இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.