உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Monday, July 8, 2019

விவசாயிகளுக்கு நூறு சதம் மானியத்தில் பிரதமரின் நுண்நீர் பாசனத்திட்டம்



விவசாயிகளுக்கு நூறு சதம் மானியத்தில் பிரதமரின் நுண்நீர் பாசனத்திட்டம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பின்னலூரில் விவசாயிகளுக்கான பிரதமரின் நுண்நீர் பாசனத்திட்டம் விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.பின்னலூர் கிராம நிர்வாக அலுவலர் அ-லுவலகத்தில் நடைபெற்ற முகாமில் வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி சுதாமதி தலைமை வகித்தார்.துணை வேளாண்மை அலுவலர் மணி, உதவி வேளாண்மை அலுவலர் செந்தில்,கிராமநிர்வாக அலுவலர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் பிரதமரின் நுண்நீர் பாசனத்திட்டத்திற்கு கருப்பு பைப்புகள் பெற பின்னலூர் பகுதியை சேர்ந்த  சிறு குறு விவசாயிகள் நூறு சதமானியத்துடன் பெறும் விண்ணப்பங்களை வேளாண்மை உதவி இயக்குநர் சுதாமதியிடம் அளித்தனர்.இது குறித்து பேசி வேளாண்மை உதவி இயக்குநர் பிரதமரின் நுண்நீர் பாசனத்திற்கு கருப்பு பைப்புகள் சிறு,குறு விவசாயிகளுக்கு நூறு சதம் மானியத்துடனும், மற்ற விவசாயிகளுக்கு எழுபத்தியந்து சதம் மானியத்திலும் வழங்கப்படுகிறது.இதற்கு விண்ணப்பிக்க விவசாயிகள் தங்களின் சான்றுகளான சிட்டா,அடங்கல்,ஆதார்கார்டு,குடும்ப அட்டை,தாங்கள் சிறுகுறு விவசாயி என்பதற்கான சான்று,நிலத்தின் வரைபடம் என அனைத்து ஆவணங்களையும் சமர்பித்து ஈசேவை மையங்கள்,தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இருக்கும் தனி பிரிவிலோ விண்ணப்பிக்கவேண்டும்.இதற்கு தகுதியுள்ள விவசாயிகள் அதற்கான மானியத்தினை பெற்று கருப்பு பைப்புகளை பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில்  பின்னலூர் கிராம உதவியாளர் திருஞானம்,ஏராளமான விவசாயிகள்  என இம்முகாமில் பங்கேற்றனர்.