உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, July 20, 2019

சேத்தியாத்தோப்பு அருகே ஒரத்தூரில் அண்ணாமலைப்பல்கலைக்கழக மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சிபெறும் திட்டம் துவக்கம்





சேத்தியாத்தோப்பு அருகே ஒரத்தூரில்
அண்ணாமலைப்பல்கலைக்கழக மாணவிகள்
கிராமத்தில் தங்கி பயிற்சிபெறும் திட்டம் துவக்கம்.கடலூர் மாவட்டம்
சேத்தியாத்தோப்பு அருகே அமைந்துள்ளது ஒரத்தூர் கிராமம்.இக்கிராமத்தில்
சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழக வேளாண்புலம் வேளாண்மைத்துறைஇறுதியாண்டு மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சிபெறும் திட்டத்தின்துவக்க விழா நடைபெற்றது.இதில் ஒரத்தூர் கிராமகிராமநிர்வாக அலுவலர்உமாமகேஸ்வரி தலைமை வகித்தார்.அண்ணாமலைப்பல்கலைக்
கழக வேளாண்விரிவாக்கத்துறை உதவி பேராசிரியர் ரமேஷ்,வேளாண் விரிவாக்கத்துறைஇணைபேராசிரியர் காளிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வேளாண் புல மாணவி
ராஜேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.உதவி பேராசிரியர் ரமேஷ் நிகழ்ச்சியைதுவக்கி வைத்தார்.சிறப்பு விருந்தினராக தாவர நோயியல் துறை
அண்ணாமலைப்பல்கலைக்கழகம் இணைபேராசிரியர் சிவக்குமார் வருகை தந்தார். இந்தபயிற்சி முகாமில் பிஎஸ்சி நான்காண்டு படிக்கும் வேளாண்புல மாணவிகள் 16பேர் ஒரு குழுவாக தங்கி இந்த கிராம பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.இவர்கள்தாங்கள் எழுத்தளவில் இதுவரை படித்து வந்த வேளாண்மை துறை பாடத்தை தற்போது
கிராமத்தில் 45 நாட்கள் தங்கி நேரடி செயல்முறையில் அதனை தெரிந்துகொள்வதேபயிற்சி முகாமின் முக்கிய நோக்கமாகும்.இதில் மாணவிகள் விவசாயிகளைநேரடியாக வயலில் சந்தித்து அவர்களிடம் நெல் வயலில் நாற்று நடுவது,களை
எடுப்பது, மருந்து தெளித்தல்,உரமிடுதல், அறுவடை என பல்வேறு பயிற்சியை
எடுப்பார்கள்.மற்றும் அவர்களின் விவசாய அனுபவத்தையும் கேட்டு
பெறுவார்கள்.மேலும் விவசாயிகளுக்கு எழக்கூடிய சந்தேகங்களுக்கும் மாணவிகள்வேளாண்துறை அதிகாரிகளிடம் தீர்வினை கேட்டு விவசாயிகளுக்கு  பதிலளித்துகலந்துரையாடுவார்கள்.இந்நிகழ்ச்சியில்
ஒரத்தூர் முன்னாள் ஊராட்சிமன்றத்தலைவர் கருணாகரன்,செல்வராஜன்
,திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொன்முடி, உள்ளிட்ட விவசாயஅதிகாரிகள்,ஏராளமான ஒரத்தூர் கிராம விவசாயிகள்,காவல்துறையினர் என பலரும்
கலந்துகொண்டனர்.அனைவருக்கும் மரக்கன்றுகளை வேளாண்புல மாணவிகள்வழங்கினார்கள்.முடிவில் வேளாண் புல அண்ணாமலைப்பல்கலைக்கழக மாணவி புஷ்பா
நன்றி கூறினார்