உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, July 11, 2019

தமிழ்நாடு அரசின் சார்பில் புவனகிரியில் அரசு பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு இலவச மடி கணினி வழங்கும் முகாம்


கடலூர் மாவட்டம் புவனகிரியில் தமிழ்நாடு அரசின் சார்பில்  அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இலவச மடிகணிணி வழங்கும் முகாம் புவனகிரி  மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  நடைபெற்றது.இதில் வடலூர் கல்வி மாவட்டம் வட்டார கல்வி அலுவலர் ஜானகி தலைமை வகித்தார்.வட்டார வளமைய மேற்பார்வையாளர் பூங்கோதை முன்னிலை வகித்தார்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்ற காலங்களில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது அன்றாட பள்ளி தொடர்பான தகவல்களை கல்வித்துறை அதிகாரிகளுக்கும்,அரசுக்கும் தெரியப்படுத்தும்போது தனியார் பிரவுசிங் சென்டர்களை பயன்படுத்தி தகவல்களை அனுப்பி வந்தனர்.இவ்வாறு தகவல் அனுப்பும்போது தகவல் பாதுகாப்பின்மை,அதிக பொருள்,காலவிரயம்,ஏற்பட்டது. மேலும் ஆசிரியர்களின் அன்றாடப்பணிகளும் பாதிக்கப்பட்டன.இதனால் தமிழக அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளித்தொடர்பான மற்றும் மாணவர்களின் நிலைப்பற்றிய தகவல்களை தினமும் அதிகாரிகளுக்கு விரைவாகவும்,பா-துகாப்பாகவும் அனுப்ப இலவச மடிகணிணி வழங்க முடிவு செய்து அதன்படி வழங்கி வருகிறது.இதனால் ஒவ்வொரு அரசுப்பள்ளித்தலைமை ஆசிரியரும் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து பாதுகாப்பாகவும், துல்லியமாகவும் தகவல்களை கல்வித்துறை அதிகாரிகளுக்கும்,தமிழக அரசுக்கும் அனுப்பமுடியும்.மேலும் தமிழக அரசு சரியான தகவல்களை பெற்று மாணவர்களுக்கான கல்வி வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்திடவும் முடியும்.இந்த இலவச மடிகணிணிமூலம் பல்வேறு செயல்பாடுகள் வருங்காலங்களில் தமிழக அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தவுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.அரசுப்பள்ளி ஆசிரியர்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசு இலவச மடிகணிணி வழங்கியதற்கு தங்களது மனமார்ந்த நன்றியை அனைவரும் தமிழக அரசுக்கு தெரிவித்து வருகிறார்கள்.மேலும் இந்நிகழ்ச்சியில் கணிணி ஒருங்கிணைப்பாளர்கள் இளவரசன்,சக்திவேல்,மோகன்தாஸ்,தலைமை ஆசிரியர்கள் வல்லபதாஸ்,ராஜா ராமலிங்கம்,மோகன்ராஜ்,குமார், சதானந்தம்,ஜெபஸ்டின்,தேவசேனா,வெற்றி செல்வி உள்ளிட்ட புவனகிரி ஒன்றியத்திலுள்ள 58 பள்ளிகளைச்சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் இந்த முகாமில் பங்கேற்றனர்.