உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, July 12, 2019

சோளப்பயிரில் படைப்புழு தாக்குதல் குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு








சோளப்பயிரில் படைப்புழு தாக்குதல் குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மேல்புவனகிரி வட்டாரத்தில் ஆனைவாரி,கிளாவடிநத்தம்,வத்தராயன்தெத்து, வீரமுடையாநத்தம்,சித்தேரி,சாத்தப்பாடி,மேலமணக்குடி,சி.ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் பெருமளவில் சோளம் பயிரிட்டு வருகிறார்கள்.இந்த விவசாயிகள் பயிரிட்டுள்ள சோளத்தில் படைப்புழு தாக்குதல் குறித்து நேரடி ஆய்வு மற்றும் ஆலோசனை ,கட்டுப்படுத்துதல் குறித்து தகவல் , கருத்துரை வழங்க கடலூர் மாவட்ட இணை இயக்குநர் வேல்விழி தலைமையில் விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர்,கடலூர் மாவட்ட படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்துதல் விஞ்ஞானி இந்திராகாந்தி,கடலூர் தரக்கட்டுப்பாட்டு வேளாண்மை உதவி இயக்குநர் பார்த்தசாரதி,மேல் புவனகிரி வேளாண்மை உதவி இயக்குநர் சுதாமதி ஆகியோர் கொண்ட குழுவினர் வருகை தந்து ஆய்வுகள் ,மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டனர்.அப்போது சோளப்பயிரில் படைப்புழு தாக்குதலில் பல்வேறு நிலைகள் பற்றி சோளப்பயிரை ஆய்வு செய்து அதன் ஒவ்வொரு நிலை தன்மைகளையும், அதனை கட்டுப்படுத்துவது குறித்தும் விவசாயிகளிடம் எடுத்தரைத்தனர்.பயிர் வளர்ந்து பதினைந்து நாளிலிருந்து அதன் ஒவ்வொரு பருவத்தின்படி எவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து விவசாயிகளிடம் விளக்கமாக எடுத்துரைத்தனர்.விவசாயிகள் கலந்துரையாடலில் விளக்கமளித்து பேசிய கடலூர் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் வேல்விழிபேசும் போது சோளப்பயிர் கடலூர் மாவட்டத்தில் 2200 ஏக்கர் முதல் 2400 ஏக்கர் வரை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.இவற்றில் பெரும்பாலும் கடலூர் மாவட்டம் நல்லூர் ,மங்களுர் பகுதிகளில் கார் பருவத்தில் விவசாயிகள் மானாவாரிப்பயிராக பயிருட்டு வருவதாகவும், இதுவே விருத்தாசலம்,கம்மாபுரம்,குறிஞ்சிப்பாடி,மேல்புவனகிரி வட்டாரத்தில் குறைந்தளவே பயிரிடப்படுவதாகவும் குறிப்பிட்டார்.கடந்தாண்டு சோளத்தில் படைப்புழுவின் தாக்குதலால் ஏற்பட்ட இழப்புகுறித்து பேசிய அவர் தற்போது இதன் தாக்குதலை குறைத்து அதிக மகசூலை  பெற பயிர் விதைப்பதிலிருந்து தொடர்ந்து அனைத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் விவசாயிகள் செய்து சோளத்தில் இழப்பு ஏற்படுவதை தவிர்க்கவேண்டும்.இதனையடுத்து கடலூர் மாவட்ட வேளாண்மைத்துறை தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் பார்த்தசாரதி கூறும்போது சோளம் விதைத்து பதினைந்து நாளில் படைப்புழுவின் தாக்குதல் தென்பட்டால் வேப்ப எண்ணை அல்லது அசார்டிராக்டின் ஆகியவற்றினை பயிரில் தெளிப்பு செய்யவும், அதன்பிறகு கதிர் வரும்போது தாக்குதல் தென்படும்போது விவசாயிகள் வேளாண்மைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாதிப்பை தெரிவித்து அவர்களின் ஆலோசனையின்படி மருந்து தெளிக்கவேண்டும்.மேலும் ஒரே  வகையான மருந்துகளை தொடர்ந்து விவசாயிகள் தெளிப்பதை தவிர்க்கவேண்டும் எனவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.இதனையடுத்து பேசிய புவனகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுதாமதி கூறும்போது படைப்புழு தாக்குதல் சோளத்தில் தென்படும்போது பல விவசாயிகள் தாங்களாகவே மருந்துகளை வாங்கி தெளிக்கிறார்கள் .இது தவறான நடைமுறை.உடனடியாக அவர்கள் அருகிலுள்ள வேளாண்மைத்துறை அல்லது வட்டார வேளாண்மைத்துறையை தொடர்புகொண்டு அவர்களின் சரியான வழிகாட்டலைப்பெற்று அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் எனவும் கூறினார்.விருத்தாசலம் மண்டல வேளாண்மை விஞ்ஞானி இந்திராகாந்தி   பேசும்போது சோளப்பயிர் பயிரிடும்போது கோடை உழவு செய்தல்,வேப்பம்புண்ணாக்கு, பூஞ்சான மருந்து தெளித்து விதைநேர்த்தி,ஒவ்வொரு சோளப்பயிர்க்கும் சரியான இடைவெளிவிடுதல்,இவற்றினூடே ஊடுபயிர்,வரப்பு பயிர்போன்றவற்றை பயிரிடுதல்,இனக்கவர்ச்சி பொறி வைத்து தாய் அந்துப்பூச்சியை கவர்ந்து அழித்தல்,வேப்பம் புண்ணாக்கு மற்றும் சரியான ரசாயண மருந்துகளை தெளித்தல் போன்றவற்றை செய்தால் இந்த படைப்புழுவைக்கட்டுப்படுத்தி விவசாயிகள் சோளம் பயிரிட்டு அதிக மகசூல் பெற்று அதிக வருமானமும் பெறலாம் என்று கூறினார்.இதுபோன்று சோள விவசாயிகளுக்கு விரிவாக படைப்புழு பாதுகாப்பு குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.முடிவில் வட்டார வேளாண்மை அலுவலர் ராஜராஜன் நன்றியுரை வழங்கினார். இந்த களஆய்விற்கான ஒருங்கிணைப்பை வேளாண்மை அலுவலர் மணி மற்றும் உதவி அலுவலர்களும் செய்திருந்தனர்.