உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, July 12, 2019

புதிய அரிமாசங்க நிர்வாகிகள் பதவியேற்புவிழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் உள்ள கேபிடி திருமணமண்டபத்தில் 2019&2020 ஆண்டிற்கான சேத்தியாத்தோப்பு புதிய அரிமாசங்க சேவை பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. முன்னாள் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார்.முதல் து¬ணை நிலை ஆளுநர் முருகப்பன் புதிய சேவை ஆண்டின் 2019&2020 சேத்தியாத்தோப்பு அரிமாசங்கத்தின் தலைவர் அன்பழகன்,செயலாளர் முத்துசாமி,பொருளாளர் மகாகிருஷ்ணன் ஆகியோரை பொறுப்பில் அமர்த்தி சிறப்புரையாற்றினார்.மாவட்ட தலைவர் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார்.  பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 
உள்ளூர்,வெளியூர்,வெளிமாநில அரிமாசங்க நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர். தேர்வில் வெற்றி பெற்ற அரசுப்பள்ளி, மற்றும் தனியார் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது.சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்திற்கு பீரோ,சேர்,மின்விசிறிகள்,அரசுப்பள்ளிகள் போன்றவற்றிற்கு ரூ 70ஆயிரம் ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளும் தொடர்ச்சியாக வழங்கபட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவை இணைபொருளாளர் அன்வர்தீன்,மண்டலத்தலைவர் சந்திரகாசு,முதல் உதவித்தலைவர் செங்குட்டுவன்,இரண்டாம் உதவித்தலைவர் ராஜசேகர்,இணைச்செயலாளர் பாலசுப்ரமணியன்,இணைபொருளாளர் சாமுவேல் பிரவீன், உறுப்பினர் வளர்ச்சி தலைவர் விஸ்வநாதன், கிளப் ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர்கலைச்செல்வன், சௌந்தரராஜன்,தில்லை, கேபிடி இளஞ்செழியன், கலியமூர்த்தி,தாமரைச்செல்வன்,புகழேந்தி,அண்ணாமலை உள்ளிட்ட ஏராளமான அரிமாசங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.முடிவில் செயலாளர் முத்துசாமி நன்றியுரை வழங்கினார்.
சேத்தியாத்தோப்பு அரிமா சங்கத்தின் புதிய தலைமைக்கு அதன் சேவைகள்  சிறக்க பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இரண்டாம் துணை நிலை ஆளுநர் சுரேஷ்நீலகண்டன் சேவைப்பணிகளை துவக்கி வைத்து வாழ்த்துரை  வழங்கினார்.