உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, July 6, 2019

வடலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்





வடலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலர்கள் சங்க செயற்குழு கூட்டம்.கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள அண்ணா திருமணமண்டபத்தில் தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலர்கள் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட தலைவர் சங்கர் தலைமை வகித்தார்.மாநில அமைப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநில பிரச்சார செயலாளர் தங்கதுரை, மண்டலத்தலைவர் ராஜ்குமார்,மாவட்ட பொருளாளர் நாராயணசாமி,மாவட்ட ஆலோசகர் சோழன்,உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்டசெயலாளர் பாஸ்கரன் வரவேற்புரையாற்றினார்.மாநில தலைவர் வாசுதேவன் சிறப்புரையாற்றினார்.இதில் கடலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே ஊராட்சி மன்றத்தலைவர்,துணைத்தலைவர் மூலம் தானே வீடுகட்டும் திட்டத்தில்  நடைபெற்ற  முறைகேடுகளுக்குஊராட்சி செயலர்களை பொருப்பாக்கி பணி நீக்கம் செய்வது மற்றும் இழப்பீடு தொகை கட்ட சொல்வது,தற்போதுள்ள கடும் வறட்சியால் ஏற்படும் தண்ணீர் பிரச்னைகளுக்கு ஊராட்சி செயலாளர்களை பொறுப்பாக்குவது,மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஊராட்சி செயலர்களுக்கு ஒத்துழைப்பு தரமறுத்தல்,சில மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களே ஊராட்சியின் ரொக்க புத்தகத்தை எழுதி காசோலை வழங்குதல்,பணிநீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலர்களை உடனடியாக பணியில் சேர்க்கவேண்டும்,ஊராட்சியில் 14வது நிதிக்குழு பணியை ஊராட்சி செயலருக்கு தெரியாமல் பணி செய்வது சம்மந்தமாக உள்ளிட்ட  பத்துக்குமேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.மேலும் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் ஊராட்சி செயலர்களுடன் இன்னும் விரைவாக இணைந்து செயல்பட்டு ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள அடிப்படை பிரச்னைகளாவன குடிநீர்,தெருவிளக்கு,கழிவறை,கிராம சாலை வசதி போன்ற பல பணிகளை வேகமாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்று மாவட்ட அதிகாரிகளுக்கு இந்த செயற்குழு கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் கடலூர் ரமேஷ்,வெங்கடகிருஷ்ணன்,தேவநாதன்,பண்ருட்டி சுப்ரமணியன், வடிவேல்,புவனகிரி சிற்றரசு,அருள் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சிகளைச்சேர்ந்த ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர். செயற்குழு கூட்டத்தின் முடிவில் ஒன்றிய தலைவர் கோவிந்தராஜன் நன்றியுரை வழங்கினார்.
படம்&சேத்தியாத்தோப்பு அருகே வடலூரில் தமிழக அரசுக்கும்,மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை வைத்து தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.