உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, June 15, 2019

சேத்தியாத்தோப்பில் தனியார் பள்ளி கட்டணக்கொள்ளை பெற்றோர் போராட்டம்



சேத்தியாத்தோப்பில் தனியார் பள்ளி கட்டணக்கொள்ளை.
பெற்றோர்  போராட்டம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்பசுகாதாரநிலையம் அருகில் அரசு உதவி பெறும் டிஜிஎம் மேல்நிலைப்பள்ளியும்,நர்சரி,மற்
றும்பிரைமரிபள்ளியும் அமைந்துள்ளது.                          
இந்நிலையில் நேற்று  காலை இப்பள்யின்
முன்பு தனியார் நர்சரி,பிரைமரி பள்ளியில் படிக்கும் சென்னிநத்தம்
சரிதாவின் மகள்  ரிஷிதா(4ஆம் வகுப்பு),கிளாங்காடு நாராயணசாமி மகன்
சபரிவாசன்(யூகேஜி ஏ1 வகுப்பு),சென்னிநத்தம் பாலுமகன் கதிரவன்(4 ஆம்
வகுப்பு) ஆகிய மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் மற்றும் புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னனி மாவட்ட செயலாளர் மணியரசன்,பாலுமகேந்திரன் ஆகியோர்
இப்பள்ளியின் நுழைவாயில் முன்பு அமர்ந்து கட்டணக்கொள்ளையில் ஈடுபட்டுவரும் இந்த தனியார் பள்ளியினை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்யவேண்டும்.தொடர்ந்து மாணவர்களையும்,மாணவர்களின்பெற்றோர்களையும் அதிக
கட்டணம் வசூலித்து மன உளைச்சல் ஏற்படுத்தி வரும் பள்ளியின் உரிமத்தை
ரத்து செய்யவேண்டும் என கூறி கோஷங்களை எழுப்பினர்.இதனால் அப்பகுதியில்பரபரப்பு ஏற்பட்டது.உடனடியாக தகவலின்பேரில் விரைந்து வந்தசேத்தியாத்தோப்பு எஸ்ஐ கமலகாசன்,சக்திவேல் ஆகியோர் போராட்டம்
செய்தவர்களிடம்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது பாதிப்படைந்த
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கும்போது இப்பள்ளியானது தொடர்ந்துகல்விக்கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.நாங்கள் சாதாரணகுடும்பத்தைசேர்ந்தவர்கள்.எங்கள் பிள்ளைகளை கட்டாயகல்வி உரிமைச்சட்டத்தின்படிஇப்பள்ளியில் சேர்த்துள்ளோம்.எங்கள் பிள்ளைகளை கட்டாய கல்விஉரிமைச்சட்டத்தின்படி  ஆரம்பத்தில் சேர்த்துக்கொண்ட பள்ளி நிர்வாகம்பிறகு சென்றாண்டு முதல் தற்போது வரை திடிரென்று உங்களுக்கு கட்டாய கல்விஉரிமைச்சட்டத்தின்படி இடஒதுக்கீடு கிடையாது என்று கூறி மாணவர்களைதனிமைப்படுத்தி வைத்தனர்.இதுகுறித்து நாங்கள் மாவட்ட கல்வி அதிகாரியிடம்பல முறைபுகாரளித்துள்ளோம்.ஆனாலும் எவ்விதமான நடவடிக்கையும் இல்லாததால்
நாங்கள் இன்று எங்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று கூறி
இப்பள்ளியின் நுழைவாயில் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தும் நிலைக்கு
தள்ளப்பட்டோம் என்று வேதனையுடன் அவர்கள் காவல் துறையினரிடம்
தெரிவித்தனர்.மேலும் இதில் மாணவர் சபரிவாசன் தந்தை நாராயணசாமி கூறும்போதுதான் ஒரு மாற்றுத்திறனாளி தன்னால் எவ்விதமான பணிக்கும்
செல்லமுடியாது.இதனை தெரிந்தே பள்ளிநிர்வாகம்  கட்டாய கல்வி
உரிமைச்சட்டத்திற்கான இடஒதுக்கீடு இருந்தும் எனது மகனுக்கு இடம் தராமல்என்னிடம் மகனுக்கான பள்ளிக்கட்டணத்தை முழுமையாக கட்டுங்கள் என்று மனஉளைச்சல் ஏற்படுத்தி வருகின்றனர்.பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேறு வழிதெரியலை சார் என அவரும் தனது குமுறலை காவல்துறையினரிடம்வைத்தார்.இதனையடுத்து நீண்டநேரமாக பள்ளி நிர்வாகத்திடம் போலீசார்பேசமுயன்றபோது பள்ளிநிர்வாகிகள் யாரும் போலீசாருடன் பேச்சுவார்த்தைக்கு
வராமல் பள்ளியில் வேலை செய்துவரும் ஆசிரியர்களை வைத்து போலீசாரிடம்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.முடிவாக பள்ளிநிர்வாகம் சில முரண்பாடுகளைசெய்துள்ளதை கண்டுபிடித்த போலீசார் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக
அவர்களுக்கான கல்வி கற்கும் வாய்ப்பை வழங்கவேண்டும்.இல்லை என்றால் பள்ளி


நிர்வாகத்தின்மீது நடவடிக்கை எடுக்கநேரிடும் என போலீசார்
பள்ளிநிர்வாகத்தின் சார்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்களிடம்
எச்சரித்தனர்.