உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, June 16, 2019

சேத்தியாத்தோப்பு அருகே அரசுப்பள்ளி மாணவர்கள் மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்




அரசுப்பள்ளி மாணவர்கள் மாலை அணிவித்து
ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேஅமைந்துள்ளது வாழைக்கொல்லை அரசு நடுநிலைப்பள்ளி.இப்பள்ளியில் 150க்கும்
மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.சிறப்பான கற்றல் வழிகாட்டலில்வாழைக்கொல்லை அரசு நடுநிலைப்பள்ளி முதலிடத்தில் இருந்து வருகிறது.இதனால்
வாழைக்கொல்லை அரசுப்பள்ளியில் இந்தாண்டு மொத்தம் 23 மாணவர்கள் சேர்க்கைநடைபெற்றுள்ளது.அதிலும் இதே ஊரைச்சேர்ந்த பலர் தங்களின் பிள்ளைகளைதனியார் பள்ளிகளில் சேர்ந்திருந்ததை நிறுத்திவிட்டு அங்கிருந்து மீண்டும்தங்களது கிராமத்திலுள்ள அரசுப்பள்ளியிலேயே அவர்களை சேர்த்துள்ளனர்.இதனால்
இன்னும் பல மாணவர்கள் இந்தாண்டிலேயே வாழைக்கொல்லை அரசுப்பள்ளியில்சேருவதற்கான சூழல் உருவாகியுள்ளது.இவ்வாறான நிலையில் வாழைக்கொல்லை அரசு
நடுநிலைப்பள்ளியில் இந்தாண்டு புதியதாக சேர்க்கப்பட்ட இருபத்திமூன்று
மாணவர்களை கவுரவிக்கும்பொருட் அவர்களை கிராமத்தின் தெருக்களின் வழியாககீரை வட்டார கல்வி அலுவலர் குமார் தலைமையில்,கீரை வட்டார கல்விமேற்பார்வையாளர் வேதகிரி,சமூக ஆர்வலர் மணிமாறன்,வெங்கடாசலம்,சிவனேசன்
ஆகியோர் முன்னிலையில்,பள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பராஜ்,ஆசிரியர்கள்அன்பகம்,வள்ளி,கீதா,கீர்த்திகா,
சேத்தியாத்தோப்பு அருகே
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்பன்னீர்செல்வம், பள்ளிமேலான்மைக்குழு தலைவி மாதரசி, மற்றும் சமூகஆர்வலர்கள்,முன்னாள் மாணவர்கள்,மாணவர்களின் பெற்றோர்,ஊர்பொதுமக்கள்
ஆகியோர் புடைசூழ மேளதாளத்துடன் மாணவர்களுக்கு மாலை அணிவித்து அழைத்துவந்து கவுரவித்தனர்.இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவிக்கும்போதுஅரசு வழங்குகின்ற அனைத்து சலுகையோடு தரமான கல்வி என்பதுஅரசுப்பள்ளிகளில்தான் கிடைக்கிறது.நாங்கள் அர்ப்பணிப்போடு ஒவ்வொருமாணவர்களையும் தனி கவணம் செலுத்தி தயார்செய்கிறோம்.இவ்வாறு
அரசுப்பள்ளியில் படித்து வெளியில் செல்லும் மாணவர்கள் தங்களது சிறப்பானஎதிர்காலத்தை அவர்களாகவே திறம்பட உருவாக்கி வாழ்வின் உயர்ந்த நிலைக்குவருகிறார்கள்.இன்றய ஊர்வலமானது அனைவருக்கும் அசுப்பள்ளியில் தம்பிள்ளைகளை
சேர்க்கவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே நடத்தினோம்.இதனால்பலரும் வழக்கமான தங்களது எண்ண ஓட்டத்திலிருந்து மாறி தங்களது பிள்ளைகளை
அரசுப்பள்ளியில் சேர்க்கும் முடிவுக்கு வந்துள்ளார்கள்.இதற்கு தமிழக
அரசுக்குதான் நன்றி சொல்லவேண்டும்.அரசு தற்போது அரசுப்பள்ளிகளில் தரமானகட்டமைப்புக்களை உருவாக்குவதால்தான் இதுசாத்தியமாகிறது
என்றார்.ஊர்வலத்தின் முடிவில் பள்ளியின் ஆசிரியர் கருணாகரன் அனைவருக்கும்
நன்றி கூறினார்