உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, June 16, 2019

விரைவாக சாலையை சரிசெய்யக்கோரி எறும்பூரில் ஆலோசனைக்கூட்டம்



விரைவாக சாலையை சரிசெய்யக்கோரி எறும்பூரில் ஆலோசனைக்கூட்டம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள எறும்பூர் கிராமத்தில் விருத்தாசலம் முதல் புவனகிரி வரையுள்ள சுமார் 22 கிலோமீட்டர் தூரமுள்ள  சாலையானது சாலை விரிவாக்கப்பணியால் சேதமடைந்து தற்போது வரை சரிசெய்யப்படாமல் உள்ளது.இதனால் இந்த மோசமான சாலை சேதத்தால் தினமும் விபத்துக்களும் ,உயிராபத்துக்களும் ஏற்பட்டவண்ணம் உள்ளது.இதுவரை இந்த 22 கிலோமீட்டர் தூர சாலைகளில் நடந்த விபத்துக்களில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.எனவே இந்த சாலையை விரைந்து சரிசெய்யவேண்டும் என்பதனை வலியுறுத்தும் ஆலோசனைக்கூட்டம் எறும்பூர்கிராமத்திலுள்ள ஒரு திருமணமண்டபத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பல்வேறு கிராமமக்கள்,அனைத்து அரசியல் கட்சியினர்,புரட்சிகர மாணவர் இளைஞரணி,மக்கள் அதிகாரம் போன்ற பல்வேறு தரப்பினர் கலந்துக்கொண்டு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.முடிவில் அதிகாரிகள் விரைவாக விருத்தாசலம்,புவனகிரி சாலையை சரிசெய்யாவிட்டால் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அடுத்தக்கட்ட போராட்டத்தை கையிலெடுத்து சாலையை சரிசெய்ய வலியுறுத்துவார்கள்.மேலும் இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அதிகாரிகளின் அலட்சியத்தால் நடைபெற்ற உயிரிழப்பு என கொண்டு அதிகாரிகளின் சம்பளத்தினை பிடித்தம் செய்து உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக வழங்கவேண்டும் உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.முடிவில் மக்களதிகாரம் பாலு நன்றி கூறினார்.இந்நிகழ்ச்சியில் கம்மாபுரம் வட்டாரம் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் அருள் தலைமை வகித்தார்.தோழர் மணிவாசகம்,புரட்சிகர மாணவர் முன்னனி மணியரசன்,விருத்தாசலம் வட்டார மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.