உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, June 19, 2019

சேத்தியாத்தோப்பு அருகே பாளையங்கோட்டை தெற்குபாளையத்தில் அரசு அங்கன்வாடிக்கு கல்வி சீர் திருவிழா

சேத்தியாத்தோப்பு அருகே பாளையங்கோட்டை தெற்குபாளையத்தில் அரசு
அங்கன்வாடிக்கு கல்வி சீர் வழங்கும் விழா.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு  அருகே பாளையங்கோட்டை தெற்குபாளையம்அமைந்துள்ளது.
இங்குள்ள அங்கன்வாடி மையமானது சிறப்பான பராமரிப்பில் அங்கன்வாடி
மையத்தில் சேரும் பிள்ளைகளை பாதுகாத்து அவர்களுக்கான முன்பருவக்கல்வியைவழங்கி வருகிறது.இங்கு இந்தாண்டு புதியதாக 21 பிள்ளைகள் மையத்தில்சேர்க்கப்பட்டனர்.
இதனால் தெற்குபாளையத்தில் உள்ள அனைத்து பெற்றோர்களின் பார்வையும் இந்தஅரசு அங்கன்வாடி மையத்தில் திரும்பியது.அதன்படி ஏற்கெனவே மையத்தில் உள்ள
பிள்ளைகளோடு சேர்த்து மொத்தம் நாற்பத்தியந்து பிள்ளைகளுடன் இந்த அரசுஅங்கன்வாடி மையமானது முதன்மையானதாக திகழ்ந்து செயல்பட்டு
வருகிறது.இவ்வாறு சிறப்பு மிக்க அரசு அங்கன்வாடி மையத்திற்கு சென்னை
இளம்குழந்தைகள் உரிமைகள் காக்கும் நிறுவனம் , சேத்தியாத்தோப்பு ரிசோர்ஸ்பவுண்டேஷன் சார்பில் ,மற்றும் தெற்குபாளையம் கிராம பொதுமக்கள்,சமூகஆர்வலர்கள், உள்ளிட்டவர்கள் முன்னிலையில் அங்கன்வாடி மையத்திற்கு தேவையான
பீரோ,பெரிய சில்வர்குவளை,தண்ணீர் பிடித்து வைக்கும் சில்வர் கேன், கோரை
பாய்,தொங்கும் கரும்பலகை,மேஜை,தண்ணீர் செல்லும் பைப்சுருள் என பலவகையானபொருட்களை அங்கன்வாடி பிள்ளைகளுக்கு கல்விச்சீராக
வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் கல்விக்குழு தலைவர் வைத்தியநாதசுவாமி
தலைமை தாங்கினார்.தெற்குபாளையம் கிராமநிர்வாக அலுவலர் காமராஜ்,பெற்றோர்ஆசிரியர் சங்கதலைவர் குழந்தைவேலு,பள்ளி மேலான்மைக்குழு தலைவர் தாட்சாயிணி
விஜயகுமார் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.சேத்தியாத்தோப்பு
ரிசோர்ஸ்பவுண்டேஷன் நிறுவனர் வேளாங்கண்ணி அனைவரையும்
வரவேற்றார்.கீரப்பாளையம் பிடிஓ மோகன்,ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிதிட்ட வட்டார அலுவலர் சுடர்க்கொடி,மகளிர் சுயஉதவிக்குழுகளின் கூட்டமைப்புதலைவி உமாமுருகன்,நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் சின்னப்பன்,பட்டதாரிஆசிரியர் வாசுதேவன்,ஆசிரியயை வளர்மதி,ஒரத்தூர் அரசு ஆரம்பசுகாதாரமருத்துவமில்லா மேற்பார்வையாளர் தமிழ்செல்வன் உள்ளிட்டவர்களுடன்அங்கன்வாடி பணியாளர்கள் , கிராமபொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள்ஆகியோர்கலந்துககொண்டனர்.
மேலும் இவ்விழாவில் சிலர் அங்கன்வாடி பிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு வகையில்பயன்படட்டும் என்று நேரில் பண உதவியாகவும் வழங்கினார்கள்.இதுகுறித்துஅங்கன்வாடி கல்விச்சீர் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கும்போது பிள்ளைகள்சிறப்பான கல்வி பெறுவதற்கு அவர்களை முதலிளிருந்தே அரசு அங்கன்வாடி
மையத்தில் சேர்த்து அவர்களுக்கான முழுமையான தரமான கல்வியை பெற ஒவ்வொருபெற்றோரும் முயன்றிடவேண்டும்.சரியான கல்வி என்பது இங்குதான்வழங்கப்படுகிறது என்று பெற்றோர்களுக்கு வேண்டுகோள்
விடுக்கப்பட்டது.முடிவில் வசந்தி பிரியா நன்றி கூறிளார்