உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, June 19, 2019

புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1428 பசலி வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி விழா கடந்த 11ஆம் தேதி ஆரம்பமானது. அன்று முதல் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட வருவாய் குறுவட்ட கிராம மக்களின் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான கோரிக்கை மனு மற்றும் பட்டா மாறுதல் புதிய இலவச மனைப்பட்டா, கோருதல் முதியோர் உதவித்தொகை, மாற்று திறனாளிகள் நலன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுக்களை தினமும் ஜமாபந்தி நாளில் வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் அளித்து வந்தனர். அதன்படி நூற்றுக்கணக்கான மனுக்களை பெற்று வந்த அதிகாரிகள் மனுக்களின் உண்மை தன்மை குறித்து அதனை ஆய்வு செய்து அவர்கள் கோரிய நலத்திட்ட உதவிகளுக்கு அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர்.. மேலும் ஜமாபந்தி நாளில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த யாருமற்ற முதியோர்களுக்கு முதியோர் உதவித் தொகைக்கான உடனடி ஒப்புதலையும் அதிகாரிகள் உடனடியாக வழங்கினர். நேற்று காலை ஆரம்பமான நிறைவு ஜமாபந்தி விழாவில் மக்கள் குறைதீர்க்கும்படியாக கடலூர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல் ,புவனகிரி வட்டாட்சியர் சத்யன் ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று வருகிறார்கள்.இதனையடுத்து நாளை மறுநாள் 21ந்தேதி தொடர்ந்து நடைபெற இருக்கின்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஜமாபந்தி நாளில் பெறப்பட்ட மொத்த மனுக்கள் அவற்றுக்கான தீர்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள் ஆகியவை நிறைவு விழாவில் பயனாளிகளுக்குவழங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.