உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, April 4, 2019

சேத்தியாத்தோப்பு அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு சந்தைதோப்பு பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது.இப்பள்ளியின் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. வழக்கமாக ஜூன் மாதத்தில் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை துவக்குவது வழக்கம்.
ஆனால் தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்படி அரசு தொடக்கப்பள்ளி முதல் அனைத்து நிலை அரசுப்பள்ளிகளிலும் கட்டாயமாக  ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து  அனைத்து வகுப்பு மாணவர்களும் சேர்க்கப்படுகிறார்கள்.இதனால் அரசுப்பள்ளிகளில் மாணவ்ர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த முடியும்.தரமான கல்வியை அளிக்கமுடியும்.தனியார் பள்ளிகளோடு அரசுப்பள்ளியும் மாணவர்கள் சேர்க்கையை முன்கூட்டியே செய்ய முடியும் என்பதால் தமிழக பள்ளிக்கல்வித்துறை இந்த அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டிருந்தது. அதன்படி கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் தலைமையில்,பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் மணிமாறன்,கல்வியாளர் செங்குட்டுவன்,கார்த்திக்கேயன்,மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் முதல் வகுப்பில் நான்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.இதனை முன்னிட்டு முதல் வகுப்பில் சேர்ந்த நான்கு மாணவர்களுக்கு பூமாலை அணிவித்து,கையில் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.மேலும் சேத்தியாத்தோப்பு அரசு தொடக்கப்பள்ளியின் சார்பில் பள்ளியின் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று ஐந்து வயது நிரம்பிய பிள்ளைகளைஅரசுப்பள்ளியில் சேர்க்கவேண்டும் என்று பள்ளி மாணவ்ர்களோடு ஆசிரியர்களும் சென்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்கள்.அரசுப்பள்ளியில் சேர்க்கும் தகுதியுடைய மாணவர்களின் விவரங்களை கேட்டறிந்து அதனையும் பதிவு செய்தார்கள்.