உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, January 26, 2019

சேத்தியாத்தோப்பு பகுதிகளில் சிறப்பு கிராமசபைக்கூட்டங்கள்



சேத்தியாத்தோப்பு பகுதிகளில் சிறப்பு கிராமசபைக்கூட்டங்கள்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே எறும்பூர்,துரிஞ்சிக்கொல்லை,நெல்லிக்கொல்லை,வீரமுடையாநத்தம்,ஆதனூர் ஆகியிகிராமங்களில் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபைக்கூட்டங்கள் நடைபெற்றது.எறும்பூர் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக்கூட்டத்தில் ஊராட்சி செயலர் ஜெய்சங்கர்,செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.இதில் கிராமத்தின் வரவு&செலவினங்கள்,கிராமத்தூய்மை,குடிநீரை சிக்கணமாகம்,தூய்மையாகவும் பயன்படுத்துதல்,பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல்,கிராமத்தில் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட தீர்மானங்களும், முக்கியமாக இப்பகுதியில் உள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் என்எல்சி மூன்றாவது சுரங்கவிரிவாக்கத்திற்கு கையகப்படுத்த முடிவு செய்திருப்பதை கண்டிக்கும் விதமாகவும்,அதனை கைவிடக்கோரியும் சிறப்பு தீர்மானமாக என்எல்சிக்கு எங்களது நிலங்களையோ மனைகளையோ தரமாட்டோம் என்றும் தீர்மானங்கள் வைக்கப்பட்டு அது கிராமமக்களின் கையெழுத்திடப்பட்டு ஊராட்சி செயலரிடம் ஒப்படைக்கப்பட்டது.





நெல்லிக்கொல்லை மற்றும் துரிஞ்சிக்கொல்லை
ஊராட்சியில் நடைபெற்ற
கிராமசபைக்கூட்டத்தில் கிராமத்தின் வளர்ச்சித்திட்டங்கள்
குறித்தும்,நெல்லிக்கொல்லை,துரிஞ்சிக்கொல்லை ஊராட்சியில் செயல்படுத்தவுள்ள திட்டங்கள்,தெருவிளக்கு சரிசெய்தல் ,கழிவறை கட்டுதல் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டு அவையே தீர்மானங்களாக வைக்கப்பட்டு நெல்லிக்கொல்லை ஊராட்சி செயலர் சசிக்குமார்,துரிஞ்சிக்கொல்லை ஊராட்சி செயலர் ஜெய்சங்கர் ஆகியோர்  தலைமையில் இரண்டு கிராமமக்களிடமும்  தனித்தனியாக கையெழுத்து பெறப்பட்டது.



சேத்தியாத்தோப்பு அருகே வீரமுடையாநத்தம் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் கிராமத்தில் எவ்விதமான வளர்ச்சி திட்டங்களும் செய்யப்படவில்லை என்று
கிராமசபைக்கூட்டத்தில் பங்கேற்ற கிராமமக்கள் ஊராட்சி செயலரையும்,கூட்டத்திற்கு வந்திருந்த அதிகாரிகளையும்
கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.அடுத்மு என்எல்சி
மூன்றாவது சுரங்கவிரிவாக்கப்பணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிராமமக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் முதல் சிறப்பு தீர்மானமாக வைக்க வலியுறுத்தப்பட்டது.நீண்ட
இழுபறிக்குபின் அதிகாரிகள் கிராமமக்கள் வலியுறுத்திய
என்எல்சிக்கு இடம் தரமாட்டோம் என்ற கிராமமக்களின் எதிர்ப்பினை சிறப்பு தீர்மானமாக வைப்பதற்கு சம்மதம் தெரிவித்தனர்.மேலும் தற்போது ஊராட்சியில் நிரந்தர ஊராட்சி செயலர் இல்லாமல் இருப்பதால் பலவிதமான பணிகள் செயல்படுத்தப்படுவதில்¬லை.இப்போதுள்ள ஊராட்சி செயலர் இரண்டுகிராமத்திற்கு ஒருவர் என்று செயல்படுவதை தவிர்த்து வீரமுடையாநத்தம் கிராமத்திற்கு மட்டும் தனியான ஊராட்சி செயலரை பணியமர்த்தவேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கிராமமக்கள் கையெழுத்திட்டனர்.



சேத்தியாத்தோப்பு அருகே ஆதனூர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக்கூட்டத்தில் கிராமமக்கள் அனைவரின் முழு ஒப்புதலோடு முதல் தீர்மானமாக என்எல்சி மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிராமமக்களின் தீர்மானம் வைக்கப்பட்டது.மேலும் கிராமத்தின் வளர்ச்சி,கிராமத்தூய்மை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஊராட்சி செயலர் சுரேஷ் தலைமையில் அதிமுக ஊராட்சி கழகசெயலாளர் ஜெயசீலன் முன்னிலையில் கிராமமக்களிடம் விளக்கிகூறப்பட்டு அவர்களின் கையெழுத்து பெறப்பட்டது.

இதனிடையே சேத்தியாத்தோப்பு அருகே உள்ள எறும்பூர்.வீரமுடையாநத்தம்,ஆதனூர் உள்ளிட்ட நாற்பதுக்கும்மேற்பட்ட கிராமங்களில் நெய்வேலி என்எல்சியின் மூன்றாவது சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள்,கட்டிடங்கள்,பேருந்து நிறுத்தங்கள் என அனைத்து இடங்களிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது.இதுபோல் கிராம சபைக்கூட்டத்திற்கு வந்த அனைத்து கிராமமக்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.