உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, January 26, 2019

சேத்தியாத்தோப்பு பகுதியில் இந்திய குடியரசு தின விழா






சேத்தியாத்தோப்பு பகுதியில் இந்திய குடியரசு தினவிழா.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் இந்தியாவின் 70 வது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.சேத்தியாத்தோப்பு எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கொண்டாடப்பட்ட சுதந்திர தினவிழாவில் ஆலையின் தலைவர் கானூர் பாலசுந்தரம் சர்க்கரை ஆலைத்தொழிலாளர்கள்,மற்றும் பாதுகாவலர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு ஆலை வளாகத்தில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வணங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஆலையின் ஆட்சியர் மணிமேகலை,இந்நிகழ்ச்சியில் நிர்வாககுழு இயக்குநர்கள் குணசேகரன்,சிவக்குமார்,சக்திவேல், முருகானந்தம்,இளம்செல்விசல்வராசு,செல்வக்களஞ்சியம் ஜெயமணி,பேபிலலிதாகருணாமூர்த்தி,கலைச்செல்வி பாலமுருகன்,ஆதிமூலம்,தங்கஆனந்தன்,முத்துசாமி, மதியழகன்,பாலமணிக்ககண்டன்,ஆலையின் தலைமை கரும்பு அலுவலர் மணிமாறன்,அலுவலக மேலாளர் முனியம்மா,மாணிக்கராஜ்,தலமை பொறியாளர் செங்குட்டுவன்,செல்வேந்திரன்,தொழிலாளர் நல அலுவலர் பன்னீர்செல்வம்,மாநில சர்க்கரைப்பிரிவு செயலாளர் சண்முகம்,அண்ணா தொழிற்சங்க தலைவர் சம்பத்குமார்,செயலாளர் மாரியப்பன், உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.





சேத்தியாத்தோப்பு அரசு நடுநிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்ட குடியரசு தினவிழாவில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்து தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் வைக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளி படிப்பிற்கு தேவைப்படும் ஜாமெண்டரிபாக்ஸ்,பேனா,பரீட்சை அட்டை,உள்ளிட்ட எழுதுபொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.அனைத்து மாணவர்களுக்கு நினைவுப்பரிசாக பெண்சில் வழங்கப்பட்டது.இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சேகர்,ஆசிரியர்கள் வாசவி,தில்லைக்கரசி,அறிவுக்கடல்,அரிமாசங்க செயலாளர் அன்பழகன்,ராஜசேகரன்,சௌந்தரராஜன்,தில்லை,ஆனந்தன்,கிட்டு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.







சேத்தியாத்தோப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தினநிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவரும்,முன்னாள் பேரூராட்சி மன்றத்தலைவருமான கேபிடி இளஞ்செழியன் தலைமை வகித்து தேசியக்கொடியை ஏற்றிவைத்து வணங்கினார்.இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழச்செல்வி உள்ளிட்ட ஆசிரியர்கள்,ஆசிரியைகள் உடனிருந்தனர்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் கேபிடி இளஞ்செழியன் பள்ளியில் கல்வியில் சிறந்து விளங்கி வரும் மூன்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.
இதுபோல் சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் நிலைய அலுவலர் ஆனந்தன் தலைமையிலும்,சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் பேரூராட்சியின் செயல் அலுவலர் சீனிவாசன் தலைமையிலும் இந்திய குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.