உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, December 26, 2018

குடியிருப்புக்கு அருகில் மதுக்கடை துவக்கும் முயற்சியை கைவிடக்கோரி பாமக போராட்டம்




குடியிருப்புக்கு அருகில் மதுக்கடை துவக்கும் முயற்சியை கைவிடக்கோரி பாமக போராட்டம். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பு வடக்குமேட்டுத்தெருவில் குடியிருப்புக்கு அருகில் அரசு மதுக்கடை திறக்கப்படுவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த கிராமமக்கள் பாமக மாநில உழவர் பேரியக்க துணைதலைவர் தலைவர் விஜி சிட்டிபாபு தலைமையில் நேற்று  காலை சேத்தியாத்தோப்பு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த புவனகிரி தாசில்தார் ஹேமாஆனந்தி,சிதம்பரம் கலால் கோட்ட ஆர்ஐ சோமசுந்தரம், சேத்தியாத்தோப்பு வருவாய் ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் சேத்தியாத்தோப்பு போலீசார் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிட்ட இடத்தில் மதுக்கடை திறக்கப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிக்கை இருக்கிறது.அதுசம்மந்தமான அறிக்கை நகலை புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் கோரிக்கை வைத்தனர்.அதன்படி வருவாய்ஆய்வாளர் அலுவலகம் காத்திருப்பு போராட்டம் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்து முடிவுக்கு வந்தது.இதனையடுத்து சேத்தியாத்தோப்பு வருவாய் ஆய்வாளர் அலுவகத்தின்முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கலைந்து சென்றனர்.இந்த காத்திருப்பு போராட்டத்தில் பாமக சேத்தியாத்தோப்பு நகரத்தலைவர் ஜெய்சங்கர்,பசுமை தாயக மாவட்ட செயலர் அஷோக்,நகரதுணைதலைவர் கலைமணி,நகர அமைப்புச்செயலாளர் மாணிக்கம்,நிர்வாகிகள் பாண்டியராஜ்,மோகன் மற்றும் ஏராளமான மேட்டுத்தெரு கிராமபொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.