உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, December 20, 2018

சேத்தியாத்தோப்பு அருகே மஞ்சக்கொல்லை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு புவனகிரி எம்எல்ஏ அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கல்


சேத்தியாத்தோப்பு அருகே மஞ்சக்கொல்லை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு புவனகிரி எம்எல்ஏ அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கல்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மஞ்சக்கொல்லை கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சம்பத்குமார் தலைமை வகித்தார்.உதவி தலைமையாசிரியர் பாண்டுரங்கன் அனைவரையும் வரவேற்றார்.பின்னர் நடைபெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் புவனகிரி தொகுதி எம்எல்ஏ துரை.கி.சரவணன் வருகைதந்து 121 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கினார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் மஞ்சக்கொல்லை அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஜெய்சங்கர்,முதுகலை ஆசிரியர்,பட்டதாரி ஆசிரியை சாந்தி,ஆசிரியர்கள் ஆனந்தி,சரவணன்,உடற்கல்வி ஆசிரியர் ராமசாமி ஆகியோரும் உடனிருந்தனர்.மஞ்சக்கொல்லை அரசு மேல்நிலைப்பள்ளியானது எப்போதும் நூறு சதம் தேர்ச்சி தரும் அரசுப்பள்ளிகளில் ஒன்றாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.