உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Thursday, December 20, 2018

சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடியில் கல்விக்கடன் பெற்றவரின் தந்தைக்கு வங்கி நிர்வாகம் மன உளைச்சல் ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு


சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடியில் கல்விக்கடன் பெற்றவரின் தந்தைக்கு வங்கி நிர்வாகம் மன உளைச்சல் ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடி குளத்து மேட்டுத்தெருவைச்சேர்ந்தவர் தேவராஜன் மகன் தினேஷ்(26).இவர் தனது கல்விக்கடனாக குமாரக்குடியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியான பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கடந்த 2010&11 ஆம் ஆண்டில் தனது நான்காண்டு பொறியியல் பட்டப்படிப்பிற்காக ரூ 45,000 ஆயிரம் ரூபாய் கடனாக தந்தை தேவராஜன் சாட்சிக்கையெழுத்துடன் பணம் பெற்று படித்து வந்தார்.இந்நிலையில் தற்போது படித்து முடித்து வேலை தேடிவருகிறார் தேவராஜன் மகன் தினேஷ்.இன்னும் வேலை கிடைத்தபாடில்லை.இவ்வாறான சூழலில் கல்விக்கடன் கொடுத்த வங்கி நிர்வாகம் அடிக்கடி கடனை கேட்டு மனஉளைச்சல் ஏற்படுத்தி வருவதாகவும்,தான் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண்களிடம் தகாத வார்த்தைகளை கூறி வங்கியைச்சேர்ந்தவர்கள் நெருக்கடி கொடுத்துவருவதாகவும் வேதனையுடன் தேவராஜன் தெரிவித்தார்.மேலும் தேவராஜன்  சொந்த தேவைக்காக வங்கியில் உள்ள தனது வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுக்கவிடாமல், ஊராட்சி செயலரான தனக்கு மாதா மாதம் வரும் சம்பள பணம் எட்டாயிரத்தையும் எடுக்கவிடாமல், உனது மகனின் கல்விக்கடனை கட்டிவிட்டு எடுத்துக்கொள் என வங்கி நிர்வாகம் வங்கிகணக்கை முடக்கி வைத்துள்ளதாகவும்,இதனால் தனது வாழ்வாதாரம் பாதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.தனது மகனின் கல்விக்கடனை மகனுக்கு வேலை கிடைத்தவுடன் வங்கி குறிப்பிட்டுள்ள தவணைகளில் முழுமையாக திருப்பி செலுத்திவிடுவதாகவும் தெரிவித்தும் வங்கி நிர்வாகம் தொடர்ந்து தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கடுமையான மனஉளைச்சல் ஏற்படத்தி வருவதாக தெரிவிக்கும் அவர் இதுகுறித்து தனக்கு நீதி கிடைக்க நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.