உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, December 19, 2018

சேத்தியாத்தோப்பில் விடுதலை சிறுத்தைக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சேத்தியாத்தோப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் ஹெச்ராஜா அவதூறாக பேசியிருப்பதைக்கண்டித்து நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் சேத்தியாத்தோப்பு நகர செயலாளர் மாயகிருஷ்ணன் தலைமை வகித்தார்.மாநில செயற்குழு அன்பழகன்,மாவட்ட அமைப்பாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கடலூர் மாவட்ட செயலாளர் பால அறவாழி,மாவட்ட பொருளாளர்  கங்கை அமரன்,துணை செயலாளர் செல்வசெல்வமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்தனர்.பின்னர் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்திருமாவளவனை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் ஹெச்ராஜா அவதூறாக பேசியிருப்பதைக்கண்டித்து விசிகவைச்சேர்ந்த ஏராளமானவர்கள் ஒன்று திரண்டு சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலை அருகில் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.மேலும் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கடுமையாக தாக்கி பேசி வரும் ஹெச்ராஜாவை பாரதிய ஜனதா கட்சி தலைமை கட்சியினை விட்டே நீக்கவேண்டும்.மத்திய அரசும்,மாநில அரசு அவர்மேல் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிந்து கைதுசெய்ய வேண்டும் என்றும்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.மேலும் கண்டனஆர்ப்பாட்டம் முடிந்தபிறகு ஹெச்ராஜாவின்மேல்  வழக்கு பதியவேண்டும் என சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களால் புகார் மனுவும் அளிக்கப்பட்டது.இதில் சாமிநாதன்,இளவழகன்,முனிசெந்தில்குமார், ராஜா,சாரதி,கவியரசு,ரஜினிவளவன்.வினோத்பாபு,பாலகிருஷ்ணன்,ஜெயகாந்தன் உள்ளிட்ட விசிகவினர் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.