உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Tuesday, December 4, 2018

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக்கூட்டம்



தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக்கூட்டம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக்கூட்டம்  நடைபெற்றது.இக்கூட்டத்தில் சங்கத்தின் புதிய தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார்.செயலாளர் முத்தமிழ்ச்செல்வன்,பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.துணைசெயலாளர் காளிகோவிந்தராஜ் வரவேற்புரையாற்றினார்.எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாககுழு உறுப்பினர் ஆதிமூலம்  சிறப்புரையாற்றினார்.பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டியனுப்பும் விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் வழங்குதல்,சென்றக்காலங்களில் ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய நிலுவைத்தொகை இருபத்தியேழுகோடியை ஆலை நிர்வாகம் விரைவாக வழங்கவேண்டும்,ஆலைக்கு கரும்பு அனுப்பும் வாகனத்தின் வாடகையை நடப்பு சூழலை கருத்தில்கொண்டு 40 சதம் உயர்த்தி தரவேண்டும்,வாகனத்தை ஆலைக்குள் வந்தடைந்த பத்து மணிநேரத்திற்குள் கரும்பு லோடுகளை இறக்கிடவேண்டும்,கூடுதலாகவும் நேரத்திற்கு தனிவாடகை தருதல்,வாகனத்தை ஓட்டிவரும் ஓட்டுநர்கள்,கிளினர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஆலையின் உணவகத்திலேயே உணவளித்தல்வேண்டும்,உடனடியாக அனைத்து விவசாய சங்கங்களின் ஆலோசனைக்கூட்டத்தை ஆலை நிர்வாகம் கூட்டவேண்டும்,தற்போது அரவைப்பருவம் துவக்கும் ஆலையில் மூன்று லட்சம் டன் கரும்பு அரவை செய்வதற்கு ஆலைநிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.ஆலையின் நலன் சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் முழு ஒத்துழைப்பு தரும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.நிகழ்ச்சியில் மேலும் சீனிவாசன்,சண்முகம்,ஞானசபாபதி,பாலமுருகன்,வேல்முருகன், கோவிந்தராஜ்,ராதாகிருஷ்ணன்,பாலசுந்தரம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.முடிவில் நிர்வாகி மணி நன்றியுரை வழங்கினார்.