சேத்தியாத்தோப்பு அரசு உயர்நிலைப்பள்ளியில் கஜா புயல் நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளித்தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமையில்,கல்வியாளர் செங்குட்டுவன்,பெற்றோர் ஆசிரியர் சங்கம் மணிமாறன் ஆகியோர் முன்னிலையில் கஜாபுயல் நிவாரணப்பொருட்கள் சேத்தியாத்தோப்பு நகர அனைத்து வணிகர்களிடமும் சேகரிக்கப்பட்டது.இந்தப்பொருட்களானது பள்ளியின் வளாகத்தில் ஒன்று சேர்க்கப்பட்டு வடலூர் கல்வி மாவட்டத்துக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.அரிசி,மளிகைப்பொருட்கள்,பிஸ்கட்,துணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மினிலாரி வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் அரசு உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள் ராஜேஸ்வரி,சாந்தி,புவனேஸ்வரி, ஆரோக்கியமேரி,புனிதவதி,லீலாகுமாரி,டெலிசியாஷர்மிளா,வெரோணிகா,செந்தில்குமார், சங்கர்,செந்தில்ராஜா,மணிக்கண்ணன்,பராசக்தி, மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...