உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, December 21, 2018

சிதம்பரம் ஆர்ஓடி அலுவலகத்தில் மிராளூர் அரசு மணல்குவாரியை நிறுத்த மனு

சிதம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் மிராளூர் அரசு மணல்குவாரியை நிறுத்த மனு.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மிராளூர் அரசு மணல்குவாரியால் தங்களது கிராமத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக நேற்று மிராளுர்,வத்தராயன்தெத்து,சக்திவிளாகம் உள்ளிட்ட கிராமமக்கள் சிதம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் மனு அளித்தனர்.அதில் மணல்குவாரி அமைந்துள்ள பகுதியானது ஆபத்தான வெள்ளபாதிப்பு ஏற்பட்ட பகுதியாகும்.இந்த பகுதியின் கரைகள் மிக பலவீனமாக இருந்துள்ள நிலையில் மணல்குவாரிக்காக எவ்விதமான அனுமதியும் இல்லாமல் ஆற்றின் கரையை உடைத்து தவறான பாதையில் வழித்தடம் அமைத்து மணல் அள்ளப்படுகிறது.இவ்வாறு மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு,நிலத்தடி நீர் உப்பு நீராக மாறும் நிலைமை,இதனால் விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்படும்,குடிநீருக்காகவும்,விவசாய தண்ணீர்த்தேவைக்காகவும் நாங்கள் பிறரிடம் கையேந்தும் நிலை ஏற்படும்.மேலும் சென்ற காலத்தில் ஆற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது தற்போது மணல்குவாரி அமைந்துள்ள பகுதியில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் கிராமத்திற்குள் புகுந்து கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையிலிருந்து கிராமமக்கள் நாங்கள் இன்னமும் மீண்டுவரமுடியாமல் திணறி வருகிறோம்.தற்போது மணல்குவாரியை முற்றிலுமாக அகற்றிவிட்டு குவாரி அமைந்துள்ள கரைப்பகுதியை பலமானதாக மாற்றித்தரவேண்டும்.மேலும் ஆற்றில் பல்வேறு இடங்களில் கடல்நீர் உட்புகுவதை தடுப்பதற்கு தடுப்பணையும் அரசு கட்டித்தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் ஆர்டிஓ விசுமகாஜன், புவனகிரி வட்டாட்சியர்ஹேமாஆனந்தி,சேத்தியாத்தோப்பு வருவாய் ஆய்வாளர் ரமேஷ்குமார்,கிராமஉதவியாளர்கலியமூர்த்தி,விவசாயிகள் பத்மநாபன்,திருமுருகன்,பழனிச்சாமி,கலியபெருமாள், தேசிங்குராஜன்,அரங்கநாதன்,மற்றும் எராளமான கிராமமக்களும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றனர்.