உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Tuesday, December 18, 2018

சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம்



சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மகாராஜன் நிர்வாகிகள் செங்குட்டுவன்,கிருஷ்ணமூர்த்தி,கிஷோர்குமார் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.வியாபாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மணிமாறன் வரவேற்றார்.தமிழக அரசின்பிளாஸ்டிக் ஒழிப்பு தடை வரும் ஜனவரிமாதம் 2019 முதல் நடைமுறைப்படுத்தவுள்ளது.இதனைமுன்னிட்டு சேத்தியாத்தோப்பு பகுதிகளின் அனைத்து வணிகர்களும் தவறாமல் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வில் தமிழக அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் சுற்றுப்புறச்சூழல் பாதுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்கும்படியான அறிவுறுத்தலை சேத்தியாத்தோப்பு பேரூராட்சி செயல் அலுவலர்  வணிகர்களிடம் எடுத்துரைத்தார்.அப்போது சேத்தியாத்தோப்பு பகுதி வணிகர்கள் ,பொதுமக்கள்,ஓட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும் விதமாக பேரூராட்சியின் சார்பில் ஒலிபெருக்கி பிரச்சாரம்,பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு அறிவிப்பு பலகை பொது இடங்களில் வைக்கப்படும் என்றும் அவர் வணிகர்களிடம் எடுத்துரைத்தார்.இதற்கு பதிலளித்த சேத்தியாத்தோப்பு  அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு,மக்களின் நலனை முன்னிட்டு தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு நாங்கள் முழு ஆதரவை தருகிறோம் என்று கூறினர்.இந்நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணன்,ஆனந்தன்,ராஜசேகரன்,சௌந்தரராஜன்,பாலு உள்ளிட்ட வணிகர்கள் கலந்துக்கொண்டனர்.ஆலோசனைக்கூட்டத்தின் நிறைவாக அனைத்து வணிகர்களுக்கும் பேரூராட்சி செயல் அலுவலர் துணிப்பையை வழங்கினார். முடிவாக சேத்தியாத்தோப்பு பேரூராட்சி உதவியாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.