சேத்தியாத்தோப்பில் விழுப்புரம் சரக டிஐஜி ஆய்வு.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் உள்ள டிஎஸ்பி அலுவலகத்திற்கு நேற்று விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமார் ஐபிஎஸ் வருகை தந்தார்.அவர் டிஎஸ்பி அலுவலகத்தில் உள்ள பல்வேறு, காவல்துறை வழக்கு சம்மந்தமான ஆவணங்களை ஆய்வு செய்தார்.மற்றும் சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.பின்னர் அவர் காவல் துறையினருக்கு அறிவுறுத்தி கூறும்போது சேத்தியாத்தோப்பு துணை காவல் கண்காணிப்பாளர் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கவும்,வாகன தணிக்கையை அதிகப்படுத்தவும்,வழக்குகளை அதிகம் தேங்காமல் பொதுமக்கள் லோக்அதாலத் மூலம் எளிதில் தீர்வு காண வழிகாட்டவேண்டும் என்றும் காவல் துறையினருக்கு பலஆலோசனைகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ஜவஹர்லால்,சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் ராஜா,காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் ஷியாம்சுந்தர்,ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன்,அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆக்னீஸ்மேரி,ஒரத்தூர் எஸ்ஐ காமராஜ்,நடனம்,சேத்தியாத்தோப்பு எஸ்ஐ சிவக்குமார்,தனிப்பிரிவு ஏட்டு செந்தில்குமார்,தலைமைக்காவலர் மணிக்கண்டன்,டிஎஸ்பி அலுவலக போலீசார்,மகளிர் காவல் நிலைய போலீசார்,டிஎஸ்பி தனிப்படை போலீசார் என அனைத்து போலீசாரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...