சேத்தியாத்தோப்பில் குடியிருப்புக்கு மத்தியில் மதுக்கடை.கிராமமக்கள் எதிர்ப்பு.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வடக்கு மேட்டுத்தெருப்பகுதி உள்ளது.இங்குள்ள குடியிருப்புக்கு மத்தியில் டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.இன்னும் சில நாட்களில் இவ்விடத்தில் மதுக்கடை திறக்கப்பட இருக்கிறது.இந்நிலையில் நேற்று இப்பகுதியை சேர்ந்த கிராமபொதுமக்கள் முப்பதுக்கும் மேற்பட்டோர் மதுக்கடை திறக்க உள்ள கடையின் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் தெரிவிக்கும்போது இந்த மதுக்கடை அமைய உள்ள இடம் பொதுமக்கள் குடியிருப்பு பகுதி.பள்ளி,கல்லூரிக்கு செல்லும் மாணவிகள், பல்வேறு பணிகளுக்கு செல்லும் பெண்கள் நடமாடும் பகுதி,இவ்விடத்தில் மதுக்கடை திறக்கப்பட்டால் எங்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படும், முக்கியமாக பெண்களுக்கு இவ்விடத்தில் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும்.அதனால் நாங்கள் இப்பகுதியில் மதுக்கடை திறக்ககூடாது என்று கண்டிக்கிறோம்.அவ்வாறு மீறி திறக்கப்பட்டால் நாங்கள் தொடர் போராட்டஙகள் நடத்துவதைத்தவிர வேறு வழியில்லை.அதிகாரிகள் விரைவாக இக்கடை அமைய உள்ள இடத்தினை மாற்றிடவேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.இதனை வலியுறுத்தி அதிகாரிகளுக்கு மனுவும் கொடுத்துள்ளோம் என்றும் கூறினர்.புதிய திறக்கப்பட உள்ள மதுக்கடை முன்பு கோஷமிட்ட அவர்கள் பின் கலைந்து சென்றனர்.
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தற்போது மீனவர்கள் பலர் மீன்பிடித்து வருகிறார்கள்.இங்கு கெண்டை,கெளுத்தி,விறால்,இறால் மீன்...
-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது குமாரக்குடி கிராமம்.இக்கிராமத்தின் முகப்பிலும், வீராணம் ஏரியின் விஎன்எஸ் மதகுமூலம் வெளிய...
-
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் நிலம்,வீடுகொடுத்தவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்ககோரிக்கை.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ...