உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, December 16, 2018

நெய்வேலி மந்தாரக்குப்பம் காவல் நிலையம் சார்பில் வாகன விபத்து தவிர்ப்பு விழிப்புணர்வு முகாம்


நெய்வேலி மந்தாரக்குப்பம் காவல் நிலையம் சார்பில் வாகன விபத்து தவிர்ப்பு விழிப்புணர்வு முகாம்.கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் காவல்நிலைய எல்லையான மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் அருகில் மந்தாரக்குப்பம் காவல் ஆய்வாளர் மீனாள் தலைமையில் வாகன விபத்து தவிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இதில் வாகன ஒட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து அறிவுறுத்தி பேசிய காவல் ஆய்வாளர் மீனாள் அனைத்து வாகன ஓட்டிகளும் பயணத்தின்போது தங்களது பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளவும்,மற்றும் சாலை விதிகளை சரியாக பின்பற்றி பொதுமக்களுக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு இல்லாமல் வாகனங்களை இயக்கவேண்டும்.மேலும் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது, மது அருந்திவிட்டும் வாகனங்களை இயக்குதல் கூடாது,பள்ளி,கல்லூரி,மருத்துவமனை,வேகத்தடை போன்ற பகுதிகளில் விழிப்புணர்வோடு வாகனத்தை இயக்குதல்வேண்டும்.வளைவுகளில் எச்சரிக்கையோடு வாகனத்தை திருப்புதல்வேண்டும்,மற்றொரு வாகனத்தை முந்தும்போது போதிய இடவெளிவிட்டு முந்தவேண்டும்,சாலைகளில் உள்ள போக்குவரத்து விதிமுறை கோடுகளை சரியாக பின்பற்றி வாகனத்தை செலுத்துதல்வேண்டும், பாதசாரிகள் சாலையை கடக்கும்போது எச்சரிக்கையாக அவர்களுக்கு பாதிப்பில்லாமல் வழிவிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை காவல் ஆய்வாளர் மீனாள் வாகன ஓட்டிகளிடமும்,பொதுமக்களிடமும் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மந்தாரக்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன்,சிறப்பு உதவி ஆய்வாளர் பழனி, பேரூராட்சிமன்ற தலைவர் மனோகர்,14வது வார்டு செயலாளர் சம்பத்குமார்,மற்றும் மந்தாரக்குப்பம் காவல் நிலைய காவலர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.