உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, December 16, 2018

எங்கள் நிலம் எங்களுக்கு சொந்தம் இணையதள நண்பர்கள் தீர்மானம்



எங்கள் நிலம் எங்களுக்கு சொந்தம் இணையதளநண்பர்கள் தீர்மானம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அகரஆலம்பாடி கிராமத்தில் சேத்தியாத்தோப்பு,கம்மாபுரம் பகுதிய இணையதளநண்பர்கள்,அப்பகுதிகளைச்சேர்ந்த கிராமபொதுமக்கள் இணைந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் சேத்தியாத்தோப்பு அருகே புவனகிரி வட்டம் எறும்பூர்,வளையமாதேவி,வீரமுடையாநத்தம், பெரியநெற்குணம்,அகரஆலம்பாடி,ஆதனூர்,முகந்தரியாங்குப்பம்,தர்மநல்லு-ர் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருபது கிலோமீட்டர் சுற்றளவில், 12,125 ஏக்கர் விளைநிலங்கள், மனைகள் உள்ளிட்டவற்றை நெய்வேலி என்எல்சி நிறுவனம் தனது மூன்றாவது சுரங்கப்பணிக்காக கையகப்படுத்தவுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அதில் இப்பகுதி கிராமங்கள் வெள்ளாற்றின் கரையோர கிராமப்பகுதிகளாகும்.இங்குள்ள வயல்களில் நெல்,கரும்பு,நிலக்கடலை,கம்பு,சோளம்,கருணை,வெங்காயம்,கத்திரி,வெண்டை உள்ளிட்ட பல்வேறு விவசாய விளைபொருட்கள் இயல்பாக விளைகிறது.இதனால் எங்களது வாழ்வாதாரம் காக்கப்படுகிறது.இதுபோன்று இப்பகுதி விவசாயிகள் தங்களது விவசாயத்தினார் நல்லபடியாக வாழ்வை அமைத்துள்ளனர்.இவர்களுக்கு துரோகம் செய்யும் விதமாக நெய்வேலி என்எல்சி நிறுவனம் தனது மூன்றாவது சுரங்கப்பணிக்காக நிலங்களை கையகப்படுத்த முயல்கிறது.இதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.இந்த வாழ்விடங்கள் கடந்த பல்லாண்டுகளாக பாடுபட்டு திருத்தியமைக்கப்பட்ட விளைநிலங்களும்,மனைகளுமாகும்.அதனால் நாங்கள் எக்காலத்திலும் எங்களது வசிப்பிடத்தை விட்டுத்தரமாட்டோம்.எங்களது நிலம் எங்களுக்கு சொந்தம். நாங்கள் எங்களது நிலங்களையும்,மனைகளையும் காப்பதற்கு நெய்வேலி என்எல்சி நிர்வாகத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம் என்றும் அவர்கள் தெரிவித்து தீர்மானங்களை நிறைவேற்றினர்.இந்த ஆலோசனைக்கூட்டத்தில் நூற்றுக்குமேற்பட்டவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.