உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, December 21, 2018

மிராளூர் அரசு மணல் குவாரியில் சிதம்பரம் ஆர்டிஓவின் அலட்சிய ஆய்வால் அதிர்ந்த கிராமமக்கள்

மிராளூர் அரசு மணல்குவாரியில்சிதம்பரம் ஆர்டிஓவின் அலட்சிய ஆய்வால் அதிர்ந்த கிராமமக்கள்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மிராளூர் கிராமத்தின் வழியாக செல்லும் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் அரசு மணல்குவாரி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.மணல்குவாரி திறக்கப்பட்ட நாளிலிருந்தே மிராளூர்,மஞ்சக்கொல்லை,வத்தராயன்தெத்து,சக்திவிளாகம், சேத்தியாத்தோப்பு கிளாங்காடு பகுதிகளைச்சேர்ந்த கிராமமக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கிராம பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைந்து வருவதாகவும்,எதிர்காலத்தில் இப்பகுதியில் விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்படும் என்று கூறி மணல்குவாரியை மூடவேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.இந்நிலையில் நேற்று மிராளூர் அரசு மணல்குவாரியை சிதம்பரம் ஆர்டிஓ விசுமகாஜன்,புவனகிரி தாசில்தார் ஹேமாஆனந்தி,சேத்தியாத்தோப்பு வருவாய்ஆய்வாளர் உள்ளிட்டவர்கள்ள தற்போது இயங்கி வரும் மணல்குவாரியின் ஆற்றுப்பகுதியில் இறங்கி மணல் அள்ளும் பகுதிகளை பார்வையிட்டனர்.அப்போது மிராளூர்,சக்திவிளாகம்,வத்தராயன்தெத்து உள்ளிட்ட கிராமத்தினர் அவர்களை சூழ்ந்துகொண்டு இந்த மணல்குவாரி இயங்கினால் இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைந்துவிடும்,கடல் நீர் உட்புகுந்து எதிர்காலத்தில் விவசாயம் செய்ய முடியாமல் இப்பகுதி பாலைவனமாக மாறிவிடும், நாங்கள் பலமுறை அதிகாரிகளை பார்த்து முறையிட்டும் எவ்விதமான பலனும் இல்லை.அதனால் நீங்களாவது இங்கு மணல்குவாரி இயங்குவதற்கு தடைவிதித்து எங்களது வாழ்வாதாரத்தை காக்கவேண்டும் என சராமாரியாக கோரிக்கை வைத்தனர்.கிராமமக்களின் கோரிக்கைக்கு பதிலளிக்க திணறிய சிதம்பரம் ஆர்டிஓ விசுமகாஜன் கிராமமக்களிடம் எதையும் நீங்களாகவே முடிவு செய்யக்கூடாது.அதற்கென்று உள்ள அதிகாரிகள்தான் முடிவு செய்யவேண்டும்.அதெப்படி நீங்கள் இப்படிக்கேட்கலாம் என்று கேட்டதால் அங்கிருந்த கிராமமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.ஒரு அரசு அதிகாரி மக்களின் பிரச்னைக்கு தீர்வு சொல்லாமல் இப்படி பொறுப்பில்லாமல் பதில்சொல்கிறாரே என்று வேதனையடைந்தனர்.மேலும் தொடர்ந்து கிராமமக்கள் எங்கே வேறு கேள்விகள் கேட்டுவிடுவார்களோ என்று நினைத்து சிதம்பரம் ஆர்டிஒ விரைவாக சென்றதாலும் அப்பகுதி மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர்.மேலும் தற்போது மணல்சேமிப்புக்கிடங்காகவும்,அரசு மணல்குவாரியாகவும் பயன்படுத்தி வரும் சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவுள்ள இடமானது இன்னமும் முறையான ஒப்பந்தம்போடப்பட்டு அதனை பதிவு செய்யாமலிருப்பதையும் ஆய்வு செய்த ஆர்டிஓ  மணல்குவாரிக்கான அனைத்து ஒப்பந்த ஆவணங்களும் முறைப்படி பதிவு செய்யப்பட்டபின்பே மண்குவாரி இயங்க வேண்டும்.அதுவரை இயங்க கூடாது என்று உத்தரவிட்டும் சென்றார்.இதுகுறித்து இப்பகுதி மக்கள் தெரிவிக்கும்போது ஆர்டிஓவின் பேச்சு எங்களுக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது.நாங்கள் இப்பகுதியில் மிகுந்த அபாயத்தில் இருக்கிறோம்.இதனை நாங்கள் சொல்ல முற்பட்டால் அதனை பொறுமையாக கேட்காமல் விரைவாக சென்று விட்டார் ஆர்டிஓ.எங்களது பகுதியை காக்க நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.