உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Tuesday, December 18, 2018

திரும்பி போ என்எல்சி வலுக்கும் கிராமமக்கள் போராட்டம்


திரும்பி போ என்எல்சி, வலுக்கும் கிராமமக்கள் போராட்டம்.கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம்,விருத்தாசலம் வட்டங்களில் நெய்வேலி என்எல்சி நிறுவனம் தனது மூன்றாவது சுரங்க விரிவாக்கப்பணிக்காக இப்பகுதிகளில் உள்ள 12500 ஏக்கர் விளைநிலங்களையும்,குடியிருப்புகள்,மனைகளையும் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.இதனையறிந்த புவனகிரிவட்டத்தில் உள்ள வீரமுடையாநத்தம்,ஆதனூர்,அகரஆலம்பாடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமமக்கள், இளைஞர்கள்,சமூக வலைதள நண்பர்கள்,விருத்தாசலம் வட்டத்தில் சிறுவரப்பூர்,கோட்டிமுனை,ஓட்டிமேடு,உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமமக்கள்,இளைஞர்கள்,சமூக வலைதளநண்பர்கள் என தாங்களாகவே ஒன்றிணைந்து அந்தந்த கிராமபகுதிகளில் கிராமமக்களை ஒன்றிணைக்கும் ஆலோசனைக்கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.இந்த ஆலோசனைக்கூட்டங்களின் முக்கிய நோக்கமானது நெய்வேலி என்எல்சி நிறுவனம் தனது மூன்றாவது சுரங்க விரிவாக்கப்பணிகளுக்காக கையகப்படுத்தவுள்ள நிலங்களையோ,மனைகளையோ தரப்போவதில்லை.எங்களது பசுமையான வயல்களை நாங்கள் கொடுக்க மாட்டோம்.என்எல்சி நிர்வாகம் தங்களுக்கு தேவையில்லை என்பதை வலியுறுத்தும்விதமாக கோபேக் என்எல்சி (திரும்பி போ என்எல்சி) எனும் டிஜிட்டல் பேனர்களை ஒவ்வொரு கிராமத்திலும் வைப்பது,கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் கரும்புக்கொடியேற்றுதல்,கோபேக் என்எல்சி எனும் வாசகத்தை பலவடிவங்களிலும் பிரச்சாரமாக பயன்படுத்துதல்,தங்களது பூர்வீக வாழ்விடம் பாதிக்கப்படுவதால் அதனை மீட்டெடுக்க வெளிமாவட்டத்திலுள்ள நண்பர்கள்,பொதுமக்கள்,சமூஆர்வலர்கள் ஆகியோரின் உதவிகளை கோருவது,சமூக வலைதளங்கள் மூலம் ஆதரவு திரட்டுவது என ஆலோசனைக்கூட்டங்களின் தீர்மானங்கள் பலநிறைவேற்றப்பட்டுள்ளன.மேலும் கட்சிப்பாகுபாடின்றி அனைத்து கட்சியினரும்,மற்றும் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து போராடுவது,வருகின்ற அனைத்து தேர்தல்களையும் இப்பகுதியை சேர்ந்த நாற்பதுக்கும்மேற்பட்ட கிராமமக்கள் புறக்கணிப்பது உள்ளிட்ட பல கோஷங்களை ஏற்படுத்தி தங்களது வாழ்விடத்தை தக்கவைக்க கடுமையான போராட்டத்தில் இப்பகுதியின் அனைத்து மக்களும் குதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.