உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, November 14, 2018

சேத்தியாத்தோப்பு அருகே வயலுக்கு வழி விட மறுக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கிராமமக்கள் குற்றச்சாட்டு

சேத்தியாத்தோப்பு அருகே வயலுக்கு வழிவிட மறுக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்.கிராமமக்கள் குற்றச்சாட்டு.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராம் அம்மன்குப்பம் பகுதி உள்ளது.இப்பகுதியில் எறும்பூர் பெரிய ஏரிக்கு செல்லும் நீர்வாய்க்கால் உள்ளது.இந்த வாய்க்கால் சாலையோரமாகவும் அமைந்துள்ளது.இப்பகுதியில் எறும்பூர்,வளையமாதேவி,அம்மன்குப்பம் உள்ளிட்ட கிராமங்களின் விவசாயிகள் பயிர்செய்து வரும் விவசாய விளைநிலங்கள் அமைந்துள்ளது.இவ்வாறான நிலையில் இங்குள்ள விவசாய விளைநிலத்திற்கு உழவு வாகனங்கள், நெல் அறுக்கும் இயந்திரம்,வயலுக்கு உரம் எடுத்துச்செல்லுதல் போன்றவை சாலையிலிருந்து ஏரிக்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலை கடந்துதான் செல்லவேண்டும்.அப்போது வாய்க்காலில் தண்ணீர் செல்லும் பாதைக்கு பாதிப்பு ஏற்படாமல் விவசாயிகள் பாதை அமைத்து தங்களது வயலுக்கு செல்லும் வழியாக வாய்க்காலின் இரண்டு பகுதிகளில் பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் இப்பகுதிக்கு திடிரென்று வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாய்க்காலில் பாதை அமைத்தது தவறு என்று கூறி பாதையை உடைத்து எடுத்துவிட்டு வழித்தடத்தை அழித்துவிட்டனர்.இதுகுறித்து கிராமமக்கள் பல காலமாக வாய்க்கால் செல்லும் வழிக்கு பாதிப்பு ஏற்படாமல் நாங்கள் இந்த பாதைகளை பயன்படுத்தி வருகிறோம் என்று விவசாயிகள் தெரிவித்தபோதும் அதிகாரிகள் அதனை கேட்கவில்லை.இதனால் இங்குள்ள விவசாயிகள் தங்களது வயலுக்கு செல்ல முடியாமல் பெரும் வேதனையடைந்து வருகிறார்கள்.விவசாய வாகனங்கள் செல்ல முடியாததால் பெரும் இழப்பும் ஏற்பட்டுள்ளது.மேலும் இப்பகுதியில் உள்ள சிலர் தங்களது சொந்த வயலில் வீடுகள் கட்டும் பணியும் செய்து வருவதால் அவர்களாலும் அப்பகுதிக்கு செல்ல வழியில்லாததால் சிரமமடைந்து வருகிறார்கள்.இதனையடுத்து இப்பகுதியில் வயலில் நடந்து வரும் துணைமின்நிலையத்திற்கு செல்லும் வழித்தடத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் எப்படி அனுமதித்தார்கள்? இதுபோல் நாங்களும் பயன்படுத்திக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது தெரியவில்லைஅதிகாரிகள் தற்போது பணி நடந்து வரும் துணை மின்நிலையத்திற்கு   செல்லும் வழியைப்போலவே இப்பகுதியில் இரண்டு இடங்களில் பொது வழியை தண்ணீர் செல்லும் வாய்க்காலுக்கு பாதிப்பில்லாமல் அதிகாரிகள் ஏற்படுத்தி தரவேண்டும்.இவ்வாறு அதிகாரிகள்  வழிஏற்படுத்தவில்லை என்றால் நாங்கள் போராடுவதைத்தவிர வேறு வழியே இல்லை என்று அவர் வேதனையோடு தெரிவித்தனர்.