உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, November 14, 2018

சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடியில் அம்பேத்கர் சிலை உடைப்பால் பரபரப்பு





சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடியில் அம்பேத்கர் சிலை உடைப்பால் பரபரப்பு.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடி கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் மழவராயநல்லூர்,ஸ்ரீமுஷ்ணம் செல்லும் சாலையின் ஓரம் பேருந்து நிறுத்தம் அருகில் அம்பேத்கர் சிலை ஒன்று இருந்து வருகிறது.இந்நிலையில் நேற்று காலை அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டு சிலையின் முகம் சிதிலமடைந்துள்ளது என பலரும் ஒன்று திரண்டனர்.சிலையை யார் சேதப்படுத்தியது என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்கையில் அப்போது அருகில் விக்கிரவாண்டி&தஞ்சாவூர் நான்குவழிச்சாலைப்பணிக்காக கட்டிடப்பணிகளை அகற்றுவதும்,மேலும் அம்பேத்கர் சிலை அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தை ஜேசிபி எந்திரத்தின் மூலம் இடித்த அகற்ற முற்பட்டபோது தவறுதலாக அம்பேத்கர் சிலைமீதும் ஜேசிபி எந்திரத்தின் இடிக்கும் பகுதி பட்டுவிட்டது எனவும், இதற்கு பதிலாக வேறு புதிய அம்பேத்கர் சிலை இப்பகுதியில் நிறுவப்படும் என நான்குவழிச்சாலைப்பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் அப்பகுதியில் திரண்டவர்களிடம் தெரிவித்தனர்.ஆனால் அம்பேத்கர் சிலை முன்பு திரண்ட விசிகவினர் மற்றும் பொதுமக்கள் நீண்டநேரம் அமைதிகாக்கவே அங்குபதற்றமான சூழல் ஏற்பட்டது.உடனடியாக சேத்தியாத்தோப்பு உளவுப்பிரிவு போலீசார் செந்தில்குமார்,திருமுருகன் உள்ளிட்டவர்கள் வந்தனர்.அவர்களிடம் அம்பேத்கர் சிலை தொடர்பாக கிராமமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது அப்பகுதி மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவர்களிடம் மனு ஒன்றை அளித்தனர்.அந்த மனுவில் தற்போது சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய வெண்கல சிலை வைக்கவேண்டும்.இப்பகுதி  பதற்றமான பகுதியாக இருப்பதால் அம்பேத்கர் சிலையை தகுந்த பாதுகாப்புடன் உறுதியாக அமைத்து இப்பகுதி மக்களின் பார்வையில் படும்படியாக வைக்கவேண்டும் என அக்கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இம்மனுவை பெற்றுக்கொண்ட சாலை விரிவாக்கப்பணி அதிகாரிகள் அம்பேத்கர் சிலையை மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதுபோலவே இவ்விடத்தில் பாதுகாப்பாக அமைக்கப்படும் என்று உறுதியளித்ததால் அப்பகுதியில் திரண்டிருந்த விடதலைசிறுத்தைகள் கட்சியினர்,பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றனர்.இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.