உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, November 28, 2018

சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலையில் இளஞ்சூடேற்று விழா



சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலையில் இன்று இளஞ்சூடேற்று விழா.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கிவருகிறது.இந்த சர்க்கரை ஆலையின் 2018&19 ஆம் ஆண்டிற்கான கரும்பு அறவைப்பணியின் முன்னோட்டமாக இளஞ்சூடேற்று விழா நாளை 29ந்தேதி நடைபெறுகிறது.ஆலையின் அறவைப்பணியானது வருகிற டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் துவங்க உள்ள நிலையில் இந்த இளம் சூடேற்று விழா நடைபெறுகிறது.இதுகுறித்து ஆலையின் நிர்வாக குழு தலைவர் கானூர் பாலசுந்தரம்,ஆலையின் ஆட்சியர் மணிமேகலை ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெறிவிக்கப்பட்டுள்ளதாவது ஆலையின்  எல்லைக்குள் உள்ள கரும்பு பயிரிடும் 6,517 ஏக்கரில் கரும்பு பெறப்பட்டு இந்தாண்டு அறவைப்பருவத்தில் உத்தேசமாக இரண்டரை லட்சம் டன் கரும்பு அறவை செய்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.மேலும் சர்க்கரை துறை ஆணையரட உத்தரவின்படி ஆலையின் 230 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள 4500 டன் கரும்பு அரவை செய்வதற்காகவும், வெளிப்பகுதிகளிலிருந்தும் கரும்புகள் பெறப்பட்டு அறவை செய்வதற்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன எனவும்,சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பும் கரும்பு விவசாயிகளுக்கு அனுப்பிய சில தினங்களில் முழுமையான பணப்பட்டுவாடா செய்வதற்கு நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.