உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, November 28, 2018

பத்தாண்டுகளாக சாலை உள்வாங்கும் பகுதி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை



பத்தாண்டுகளாக சாலை உள்வாங்கும் பகுதி.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வடக்குமெயின்ரோட்டில் சென்னை&கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் திடிரென்று விரிசல் ஏற்பட்டு உள்வாங்கி வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து இப்பகுதியினர் தெரிவிக்கும்போது இந்த சாலையானது முக்கிய போக்குவரத்து நிறைந்த சாலையாகும்.இச்சாலையானது கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இதேபோன்று நிலை தொடர்ந்து வருகிறது.அதிகாரிகள் அவ்வப்போது வந்து பார்வையிட்டு செல்வதோடு சரிஎன்றும் எவ்விதமான நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் வேதனையோடு தெரிவித்தனர்.மேலும் இந்த சாலைப்பகுதியான சென்னை&கும்பகோணம் தேசியநெடுஞ்சாலையில் மிகவும் குறுகியதாகவும், அருகில் நீர்வழித்தடவாய்க்கால் உள்ளதாலும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளதால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சாலை உள்வாங்கும் பகுதியை சரிசெய்து தரமான சாலை அமைக்கவேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்று அவர்கள் தெரிவித்தனர்.இறுதியாக விபத்துக்கள் எதுவும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ஜவஹர்லால் தலைமையிலான போலீசார் விபத்துபகுதி என்பதை குறிக்கும் பேரிகார்டர் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.