உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Wednesday, November 14, 2018

சேத்தியாத்தோப்பு அருகே பெரியநற்குணம் கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரிநோய்தாக்குதல் கிராமமக்கள் அச்சம்




சேத்தியாத்தோப்பு அருகே பெரியநெற்குணம் கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரிநோய்த்தாக்குதல் கிராமமக்கள் அச்சம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பெரிய நெற்குணம் கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் வடக்கு தெருவில் ஏராளமானவர்கள் கால்நடைகள் வளர்த்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இங்குள்ள இருபதுக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு திடிரென்று கோமாரி நோய்த்தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் கால்நடைகள் வளர்ப்பவர்கள் பெரும் வேதனையில் உள்ளனர்.இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கும்போது இப்பகுதியில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்த்து வருகிறோம்.அதில் இருபதுக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய்த்தாக்குதல் ஏற்பட்டு மாடுகள் மேய்ச்சலுக்கு எழுந்து செல்ல முடியாமல் படுத்தே கிடக்கின்றன.மேலும் ஏராளமான கறவை மாடுகள்,வண்டி மாடுகளுக்கும் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அதனை வளர்த்தும் வரும் எங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பல முறை கால்நடை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்தவிதமான கால்நடை அதிகாரிகளும் இப்பகுதிக்கு வரவில்லை.எங்களால் தனியார் கால்நடை ஆய்வாளரிடம் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வைத்தியம் செய்ய முடியாத நிலைமை.மேலும் சேத்தியாத்தோப்பு கால்நடை மருத்துவ மனைக்கு சென்றால் கால்நடை மருத்துவரையே பார்க்கமுடியாத நிலையும், பல கிலோ மீட்டர் கால்நடைகளை அழைத்து சென்று அங்கு கால்நடை மருத்துவர் இல்லாததால் நாங்கள் வெறுமனே திரும்பவேண்டியதாக உள்ளது.தற்போது கோமாரி நோய்த்தாக்குதல் ஏற்பட்டு இருபதுக்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விரைவாக அரசு கால்நடை மருத்துவ அதிகாரிகள் இப்பகுதிக்கு வருகை தந்து கால்நடைகளுக்கு தகுந்த சிகிச்சையளித்து அவற்றினை கோமாரித்நோய்த்தாக்குதலிலி

ருந்து காப்பாற்றி எங்களது வாழ்வாதாரத்தை காக்கவேண்டும்.கால்நடை மருத்துவ அதிகாரிகள் இனியும் காலதாமதம் செய்யாமல் இப்பகுதிக்கு வருகை  தரவேண்டும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

No comments:

Post a Comment