உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Sunday, November 18, 2018

சேத்தியாத்தோப்பு புதிய பாலத்தில் மண் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

சேத்தியாத்தாப்பு புதிய பாலத்தின் மண்தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி.கடலூர் மாவட்டம்சேத்தியாத்தோப்பில் புதியபாலம் அமைந்துள்ளது.இப்பாலமானது பத்தாண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது.இப்பாலம் சென்னை, காஞ்சிப்புரம், உள்ளிட்ட வடமாவட்டங்களைம்,தஞ்சை, திருவாரூர், நாகை என தென்மாவட்டங்களையும் இணைக்கும் முக்கிய போக்குவரத்துபாலமாக அமைந்துள்ளது.இதில் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்வதால் பாலமானது எப்போதும் பரபரப்பாக இருக்கும் பாலமாக இருக்கும்.தற்போது பாலமானது தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளபாலமாக இருக்கிறது.பாலம் கட்டப்பட்ட புதிதில் முறையாக பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது பாலத்தின் பராமரிப்பு பணிகள் என்பது சுத்தமாக இல்லை.இதனால் பாலத்தில் பல இடங்களில் தேவையற்ற மண் அதிகளவில் சேர்ந்துவிட்டது.மற்றும் அதில் செடிகளும் முளைத்துள்ளது.இவ்வாறு பாலத்தில் அதிகளவில் மண்தேங்கியிருப்தால் வாகன ஓட்டிகள் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர்.பல நேரங்களில் பெரும் விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து வாகன ஒட்டிகள் உள்ளிட்டவர்கள் தேசி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்¬ வைத்தும் பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.மேலும் இதே நிலை தொடர்ந்தால் பாலத்தில் அதிகளவில் பழுதுகள் ஏற்பட்டு போக்குவரத்து துண்டிப்பும் ஏற்படலாம்.அதனால் அதிகாரிகள் விரைந்து பாலத்திலிருக்கும் மண்ணை அகற்றி முறையாக பராமரிப்பு பணிகள் செய்து பாலத்தை பாதுகாக்கவேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.