உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, November 16, 2018

சேத்தியாத்தோப்பு அருகே மருவாய் கிராமத்தில் சென்னை&கும்பகோணம் சாலையில் பாய்ந்து சென்ற மழை நீரால் பரபரப்பு


சேத்தியாத்தோப்பு அருகே  மருவாய் கிராமத்தில் சென்னை&கும்பகோணம் சாலையில் பாய்ந்து சென்ற மழை நீரால் பரபரப்பு.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது மருவாய் கிராமம்.இக்கிராமத்தில் சென்னை&கும்பகோணம் சாலை செல்கிறது.இந்த சாலையில் நேற்று அதிகாலை முதலே சாலையில் மழைவெள்ளநீர் அதிகளவில் சென்றதால் அப்பகுதி மக்களும்,சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் சாலைதான் உடைப்பு ஏற்பட்டுள்ளதோ என அச்சமடைந்தனர்.இதுகுறித்து அப்பகுதியினர் தெரிவிக்கும்போது மருவாய் கிராமத்தின் வழியாக சாலையோரமாக பரவனாறு வடிகால் வாய்க்கால் செல்கிறது.இந்த வடிகால் வாய்க்காலானது நெய்வேலி பகுதி,இந்திராநகர்,வடலூர் ,பெரியாக்குறிச்சி,சேப்ளாநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை நீர் இந்த வாய்க்கால் வழியாக சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் பயணித்து அது சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பரவனாற்றில் வடிவதற்காக கடந்த இருபதாண்டுகளுக்கு முன்பே ஏற்படுத்தப்பட்டது.இந்நிலையில் தற்போது இந்தா வடிகால் வாய்க்கால் பல இடங்களிலும் ஆக்கிரமிக்கப்பட்டும்,தூர்வாராமலும் போனதால் இப்பகுதி மழைவெள்ளநீர் வடியாமல், குடியிருப்புக்குள்ளும் தேங்கி நின்று தொற்று நோய்கள் ஏற்படுத்துவது வழக்கம்.இரண்டுநாட்களாக பெய்த மழையானது அதிகப்படியாக தேங்கி தற்போது வடிகாய்வாய்க்காலில் செல்ல வழியில்லாமல்  போனதால் மருவாய் கிராமத்தின் அருகே சென்னை&கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையோரம் தாழ்வான பகுதியில் சாலையில் பாய்ந்து சென்று அருகிலுள்ள வயலுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.மேலும் இப்பகுதியில் விக்கிரவாண்டி&தஞ்சை நான்குவழிச்சாலைப்பணி நடந்தும் வருவதால் சாலையோரம் பல  இடங்களில் பள்ளம் பறிக்கப்பட்டும் உள்ளது.அதில் தற்போது தண்ணீர் நிரம்பியுள்ளதால் சாலையில் செல்லும் வாகனங்கள் மற்ற வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும்போது ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் வாய்ப்புண்டு.அதிகாரிகள் இந்த வடிகால் வாய்க்காலை முறைப்படி தூர்வாரி வடிகால் நீர் தடையில்லாமல் செல்ல வழி ஏற்படுத்தினாலே சாலையில் மழைவெள்ள நீர் செல்வதை தடுக்கலாம்,அதனால் விபத்து ஏற்படாமல் வாகன ஓட்டிகளையும் பாதுகாக்கலாம் என்று இப்பகுதியினர் தெரிவித்தனர்.