உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Friday, November 16, 2018

சேத்தியாத்தோப்பு அருகே மிராளூர் கிராமத்தில் அனைத்துக்கட்சி ஆலோசனைக்கூட்டம்


சேத்தியாத்தோப்பு அருகே  மிராளூர்  கிராமத்தில் அனைத்துக்கட்சி ஆலோசனைக்கூட்டம்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மிராளூர் கிராமம் அமைந்துள்ளது.இக்கிராமத்தில் நேற்று இரவு மிராளூர் கிராமத்தில் அமைந்துள்ள மணல்குவாரியை அகற்றுவது தொடர்பான அனைத்துக்கட்சி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பால அறவாழி தலமை வகித்தார்.தவாகா ராஜேந்திரன்,விசிக ஒன்றிய செயலாளர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பின்னர் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் மிராளூர் கிராமத்தில் அமைந்துள்ள மணல்குவாரியை அகற்றுவது,இதற்கு சரிவர நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காக்கும் சிதம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிடுவது,உடைக்ககப்பபட்ட மணல்குவாரியின் வெள்ளாற்று கரையை பழையபடியே வலுவாக அமைத்து தரவேண்டும், பொய்வழக்கு போடும் காவல் துறையை வண்மையாக கண்டிப்பது,தவறான தகவல் தந்து மணல்குவாரியை அமைத்து இயங்க செய்த அதிகாரிகளை கைது செய்யவேண்டும், வெள்ளாற்றில் கடல் நீர் உட்புகுவதை தடுப்பதற்கு தடுப்பணைகள் கட்டவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இந்நிகழ்ச்சியில் விசிக ஒன்றிய செயலாளர் சாமிநாதன்,அமமுக மாவட்ட மகளிரணிதுணை தலைவலி வனிதா,மற்றும் கிராமமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கும்போது தற்போது இயங்கிவரும் மிராளூர் அரசு மணல்குவாரியானது அளவீட்டின்படி இல்லாமல் ஆற்றின் அடியில் இருக்கும் களிமண் தெரியும் வரை மணல் அள்ளப்பட்டுள்ளது.இதனை மறைப்பதற்கு பக்கவாட்டு மணலை தள்ளி அந்த பள்ளங்களை மறைத்துள்ளனர்.இதனை அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது கண்டுபிடிக்கலாம்.மேலும் இந்த குவாரியை அகற்றகோரி பலகட்ட போரட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.இப்பகுதி மக்கள் மணல்குவாரியால் தற்போதுள்ள பசுமையான மிராளூர் பகுதி மற்றும் இதனைச்சுற்றியிருக்கும் கிராமங்கள் பாலைவனமாக மாறிடும் என்றுதான் இப்போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள் என்று தெரிவித்தனர்.