கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் பாரத பிரதமர் மோடி பிறந்த நாள் விழா வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.இதனை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் தியாகு தலைமையில், மாவட்ட தலைவர் கேபிடி இளஞ்செழியன் முன்னிலையில் மாவட்ட செயலாளர் தியாகு தனது செலவில் அரசு மருத்துவ மனையில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் பரிசு பெட்டகம், இனிப்பு பரிசளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட துணைத்தலைவர் ஜெயக்குமார்,மாவட்ட மகளிரணி பழனியம்மாள்
மாவட்ட செயற்குழு உறுப்பினர் முரளி, என்ஆர்ஐ, சிவபிரசாத்,மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ்,ஜனகராஜ்,புவனகிரி ஒன்றிய தலைவர் ராமநாதன்,கீரை ஒன்றிய தலைவர் ராஜா உள்ளிட்ட
பாஜக நிர்வாகிகள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment