கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பில் நாளுக்குநாள் கொரானோ நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது.இதனை தடுக்கும் பொறுட்டு புவனகிரி வட்டாட்சியர் தலைமையில் சேத்தியாத்தோப்பு பேரூராட்சித்துறை,சுகாதார துறை அதிகாரிகள் தகுந்த நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.இதன் அடுத்த கட்டமாக அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு தரும்விதமாக சேத்தியாத்தோப்பு அனைத்து வணிகர்கள் சங்கத்தின் சார்பாக சனி,ஞாயிறு,திங்கள்,செவ்வாய் என தொடர் நான்கு நாட்கள் கடை அடையடுப்பு செய்யப்படுவதாக அறிவித்தனர்.அது இன்றிலிருந்து துவங்கியது.பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு தரும்படி வணிகர்கள் சங்கத்தின் சார்பாக கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment