உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Saturday, June 20, 2020

சின்னநெற்குணம் ஊராட்சியில் பழுதடைந்துள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி சரிசெய்யப்படுமா?




கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது சின்னநெற்குணம் ஊராட்சி.இந்த ஊராட்சியில் வயல்வெளிப்பகுதியின் அருகிள் அமைக்கப்பட்டுள்ள குடிநீர்மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிஅமைக்கப்பட்டு அதன்மூலம் கிராமமக்களுக்கு குடிநீர்வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நீண்டகாலமாக இருந்து வரும் இந்த குடிநீர்மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.இதில் தேக்கப்படும் குடிநீர் கிராமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் இதன் உட்பகுதி சுத்தம் செய்யப்பட்டு எவ்வளவு நாட்கள் ஆகிறதோ என கிராமமக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
இவ்வாறான நிலையில் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை புதியதாக அமைக்கவேண்டும்.பழுதடைந்தும், பில்லர்கள் விரிசல் ஏற்பட்டும் உள்ள இது எப்போது வேண்டுமானலும் இடிந்துவிழும் நிலையிலும் உள்ளது.இதனை சரிசெய்ய ஊராட்சி நிர்வாகத்திடமும்,வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடமும் தெரிவித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராமமக்கள் தெரிவித்தனர்.எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும்முன் கிராமமக்களின் நலனைமுன்னிட்டு இதனை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கவேண்டும் என சின்னநெற்குணம் கிராமமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.