கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது சாத்தப்பாடி கிராமம்.
இக்கிராமத்தில் பல்வேறு கட்சியிலிருந்து விலகியவர்கள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாரதிய ஜனதாகட்சியின் தேசிய தலைவர் நட்டார்ஜி,மாநிலத்தலைவர் முருகன் உத்தரவின்பேரிலும் கடலூர் மேற்குமாவட்ட தலைவர் கேபிடி இளஞ்செழியன் ஆலோசனையின்பேரில் பாஜகவினர் கொரானோ நோய்த்தொற்று காலத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி,காய்கறி,மளிகை பொருட்கள்,நிவாரண உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர்.இந்நிலையில் சாத்தப்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிலதிபர் குமார் தலைமையில் நலத்திட்ட உதவிகள், மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாவட்ட மீனவர் பிரிவு தலைவர் அருள் வரவேற்றார்.மாவட்ட துணைத்தலைவர் வெற்றிவேல்,மாநில பொதுக்குழு உறுப்பினர் வைரக்கண்ணு,மாவட்ட செயலர்வேல்முருகன்,ஒன்றிய செயலர் ராமநாதன் முன்னிலை வகித்தனர். கடலூர் மாவட்ட தலைவர் கேபிடி இளஞ்செழியன்,மாநிலசெயற்குழு உறுப்பினர் சாய்சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொழிலதிபர் குமார் ஏற்பாட்டின்படி ஆயிரம் பேருக்கு மரக்கன்றுகள்,நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இதில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி 400க்குமேற்பட்டவர்கள் பாஜகவில் இணைந்தனர்.மேலும் மாவட்ட துணைத்தலைவர் ஜெயக்குமார்,தவபாலன்,இளைஞரணி ராமதாஸ்,கட்சி நிர்வாகிகள் திரிசங்கு ,கோபாலகிருஷ்ணன்,கொளஞ்சியப்பன், சின்னையன்,சேகர்,ராஜேஷ்,ராஜா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.