கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது
காட்டுமன்னார்கோயில் தொகுதி கூடுவெளி அரசு பாலிடெக்னிக் கல்லுரி.இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.இந்நிலையில் இங்குள்ள மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிகணினி வழங்கும் விழா சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் தங்கமணி தலைமை தாங்கினார்.முத்தையா பாலிடெக்னிக் முதல்வர் தனவிஜயன் முன்னிலை வகித்தார்.கல்லூரி பொருளாளர் குமரவேல் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக கழக அமைப்பு செயலாளர் காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற உறுப்பினர் முருகுமாறன் கலந்து கொண்டு 203 மாணாக்கர்களுக்கு மடிகணினி வழங்கி சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் காட்டுமன்னார்கோயில் வட்டார விவசாய அட்மா தலைவர் வாசு முருகையன், விடுதி தேர்வு குழு உறுப்பினர்கள் அசோகன், வசந்தகுமார், வேல்முருகன், மாவட்ட ஆவின் பால் உற்பத்தி சங்க தலைவர் செந்தில்குமார், புரவளர்கள் அன்பு, சங்கர், பழனிவேல். முருகானந்தம், பேராசிரியர்கள் சுந்தரி, முகமது சைபுல்லா, பரமஜோதி, கிருத்திகா தேவி, முருகேசன், முத்துராமன் கூடுவெளி தொ. வே. கூ. சங்க. தலைவர் சங்கர், ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக முதலாம் ஆண்டு துறை தலைவர் கிருபாநந்தினி நன்றி கூறினார்.