உங்களுக்கு தேவையான அனைத்து வகை விசிட்டிங்கார்டுகளும் சிறந்தமுறையில் தயார் செய்து தரப்படும். உடனடியாக அனுகவும்.சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.செல்-9629645932. -

Tuesday, November 5, 2019

லஞ்சம் வாங்கிய வடலூர் பேருராட்சி செயல் அலுவலர் அதிரடி கைது...


கடலூர் மாவட்டம் வடலூரில்  பேருராட்சி அலுவலகம் அமைந்துள்ளது.இங்கு செயல் அலுவலராக சக்கரவர்த்தி பணியாற்றி வருகிறார்.இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவ்வப்போது பலரும் தெரிவித்து வந்தனர்.இருந்தாலும் அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்காமல்  மாவட்ட நிர்வாகம் இவரின் செயல்பாடுகளை நிதானமாக உற்று கவனித்து வந்தது. இந்நிலையில் இவரிடம் வீட்டு மனைபிரிவிற்ககு  அனுமதி சான்று கேட்டு அப்பகுதியைச்சேர்ந்த மோகன்தாஸ் என்பவர்  வடலூர் பேருராட்சியில் வைத்து மனு அளித்தார்.

இந்த மனுவைப்பெற்றுக்கொண்ட செயல்அலுவலர் பல்வேறு முரண்பாடுகள் இதில் உள்ளதாக கூறி இதனை சரிசெய்ய கொஞ்சம் கவனிக்கவேண்டும் என வெளிப்படையாக மோகன்தாஸிடம் பணம்கேட்டதாக கூறப்படுகிறது.மேலும் நான்கேட்பதைதான் கொடுக்கவேண்டும் என ரூ.25 ஆயிரம் பணத்தை கேட்டுள்ளார் வடலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சக்கரவர்த்தி என்கின்றனர் அப்பகுதியினர்.

இதனையடுத்து அதிர்ந்துபோன மோகன்தாஸ் உடனடியாக கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார்கொடுத்தார்.புகாரினைப்பெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் மோகன்தாஸிடம் ரசாயணம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பி தொடர்ந்து மாறுவேடத்தில் அப்பகுதியில் கண்காணித்து வந்தனர்.

அதனைப்பெற்ற மோகன்தாஸ் 05&11&2019 காலை பேரூராட்சி அலுவலகம்சென்று தனக்கு விரைவாக சான்று தரும்படி கேட்டுள்ளார்.ஆனால் செயல் அலுவலர் சக்கரவர்த்தியோ தொடர்ந்து பணம் கொடுத்தால்தான் சான்று என்று கூறியுள்ளார்.அமைதியாக சிறிதுநேரம் யோசிப்பதுபோல் இருந்த மோகன்தாஸ் தான் வைத்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயணம் தடவிய பணத்தை ரூ.25ஆயிரத்தை கொடுத்தார்.அதே அங்கே மாறுவேடத்திலிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக சக்கரவர்த்தியை பணத்தோடு கையும் களவுமாக பிடித்து கைது செய்து ஜீப்பில் ஏற்றினர்.இதனால் வடலூரில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.